• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-02 09:04:34    
விகுர் இன மருத்துவயியலாளர் மேமேதி ஹ்ஸ்மு

cri
விகுர் இன மருத்துவம், வட மேற்கு சீனாவின் சிங்கியாங் விகுர் தன்னாட்சிப் பிரதேசத்தில் வாழும் விகுர் இனத்தால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு தேசிய இன மருத்துவமாகும். இது, ஈராயிரம் ஆண்டுகால வரலாறுடையது. விகுர் இன மருத்துவம் வளர்ந்து வரும் போக்கில், தலைசிறந்த மருத்துவ நிபுணர்கள் பலர் தோன்றிக் கொண்டே வருகின்றனர். அவர்களின் உந்துவிசையுடன், விகுர் இன மருத்துவம், சிங்கியாங்கிலிருந்து உலகத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. இன்றைய நிகழ்ச்சியில், விகுர் இன மருத்துவ நிபுணர் மேமேதி ஹ்ஸ்மு பற்றி தங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம்.

55 வயதான மேமேதி ஹ்ஸ்மு, சிங்கியாங்கின் யூ தியன் மாவட்டத்தில் தலைமுறை தலைமுறையாக மருத்துவத்தில் ஈடுபட்டு வரும் விகுர் இன குடும்பத்தில் பிறந்தார். குழந்தை பருவத்திலேயே அவர், விகுர் இன மருத்துவயியல் பேரக்கறையை காட்டினார். அவர் கூறியதாவது:

"எனது தந்தையின் தம்பி, உள்ளூரில் பிரபலமான விகுர் இன மருத்துவர். துவக்கப் பள்ளியில் படிக்கும் போதே, பாடம் முடிந்த பின் அவரது மருத்துவ நிலையத்துக்குச் சென்று, அவர் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பது, மருந்துகளை நோயாளிகளுக்கு உகந்த முறையில் தேர்ந்தெடுத்து வழங்குவது எப்படி என்று பார்த்தேன். சில வேளையில், மருந்தை மாவாக்குவதில் அவருக்கு உதவுவதும் வழக்கம். அப்போது விகுர் இன மருத்துவயியலை பூர்வாங்க ரீதியில் அறிந்து கொண்டேன்" என்றார்.

அப்போது முதல், வளர்ந்த பின், ஒரு மருத்துவராக வேண்டும் என்ற கருத்து மேமேதி ஹ்ஸ்மு மனதில் ஏற்பட்டது. உயர் இடைநிலைப்பள்ளியில் படித்து முடித்த பின், அவர், உள்ளூர் கிராமத்தில் மருத்துவராகப் பணிபுரிய துவங்கினார். பகலில், அவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார். இரவில் மருத்துவ தரவுகளைத் தேடிப்பார்த்து படித்தார். மருத்துவயியல் மீதான பற்று, தம் முயற்சி ஆகியவற்றினால், மேமேதி ஹ்ஸ்முவின் மருத்துவ சிகிச்சை தரம் உயர்ந்து கொண்டே இருந்தது.

1  2  3