• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-02 09:04:34    
விகுர் இன மருத்துவயியலாளர் மேமேதி ஹ்ஸ்மு

cri

மேமேதி ஹ்ஸ்முவின் மருத்துவ நுட்பம், னாசார்பயவின் பாராட்டுகளைப் பெற்றது. இச்செய்தி பரவியதும், மென்மேலும் அதிகமான வெளிநாட்டு நண்பர்கள் விகுர் இன மருத்துவம் மற்றும் மருந்து மீது பேரார்வம் காட்டினார்கள். உலகத்துக்கு விகுர் இன மருத்துவத்தை அறிமுகப்படுத்தும் சிறந்த வாய்ப்பு, இது என உணர்ந்து கொண்ட மேமேதி ஹ்ஸ்மு ஆங்கிலம் மற்றும் உருது மொழிகளைக் கற்றுக்கொள்ளத் துவங்கி, இம்மொழிகளைத் தேர்ச்சியாகப் பயன்படுத்த அவர் பாடுபட்டார் அவர் கூறியதாவது:

"சிங்கியாங் விகுர் இன மருத்துவம், சிறந்த முறையில் கையேற்றப்பட்டு வெளிக்கொணரப்பட்டு, நவீன அறிவியல் வழிமுறையில், சிங்கியாங்கிலிருந்து உலகத்துக்கு கொண்டு செய்வது, எனது ஒரே ஒரு நோக்கம்" என்றார்.

தெரிந்த அந்நிய மொழிகளுடன், மருத்துவயியல் பரிமாற்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்ள, மேமேதி ஹ்ஸ்மு ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவின் பல நாடுகளில் பயணமானார். தவிரவும், விகுர் இன மருத்துவ மற்றும் மருந்து சிகிச்சை முறையையும் கொண்டு போனார்.

இப்போது மேமேதி ஹ்ஸ்மு, மருத்துவ துறையில் புகழ் பெற்ற நிபுணரானார். அவரின் சிகிச்சை மூலம் குணமடைந்துள்ள நோயாளிகளின் எண்ணிக்கை எண்ணற்றது. அவர்கள், மேமேதி ஹ்ஸ்மு மீது நன்றியுணர்வு கொண்டுள்ளனர். அவர்களில் ஒருவரான ஐஜிசி முகமேது நினைவுகூர்கையில் கூறியதாவது:

"நான் மருத்துவ மனையில் தங்கியிருந்த போது, மருத்துவர் மேமேதி எனது நோய் மீது மிகுந்த கவனம் செலுத்தினார். அவரது சிகிச்சை முறைகள், சிறப்பியல்புடையவை என்பது உண்மையே. அவர் என்னை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும், எனது மனதில் நிம்மதி ஏற்படும்" என்றார், அவர்.

மருத்துவத்துறையில் பெரும் புகழ் பெற்ற மேமேதி ஹ்ஸ்மு, தமது மருத்துவ அறிவை மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதில் தயங்கவில்லை. அவர், பல மாணவர்களைச் சேர்த்தார். விகுர் இன மருத்துவச் சேவையின் முதுகெலும்பான இளம் வல்லுனர்களுக்கு வழிகாட்டினார், பயிற்றுவித்தார். குலேனாஜிங் அப்டுமுக்மே, அவர்களில் ஒருவராவார். அவரின் கருத்தில், மேமேதி ஹ்ஸ்மு, ஒரு சிறந்த மருத்துவர் மட்டுமல்ல, சிறந்த ஆசிரியரும் ஆவார். அவர் கூறியதாவது:

"நான் பல்கலைக்கழகத்தில் மேலை மருத்துவ முறையைக் கற்றுக்கொண்டேன். விகுர் இன மருத்துவம் பற்றி அவ்வளவு அறியவில்லை. ஆசிரியர் ஹ்ஸ்மு பொறுமையுடன் மருத்துவ அறிவு முதல் பிந்திய நடைமுறை வரை எனக்கு சொல்லிக்கொடுத்தார். கடந்த ஓராண்டுகால படிப்புக்குப்பின், விகுர் இன மருத்துவ இயல் மீது பெரும் அக்கறை கொண்டுள்ளேன்" என்றார்.


1  2  3