• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-02 09:04:34    
விகுர் இன மருத்துவயியலாளர் மேமேதி ஹ்ஸ்மு

cri

அவரது 25ம் வயதில், சிங்கியாங்கிலுள்ள ஒரு பிரபலமான விகுர் இன மருத்துவமனையில் பணிபுரிய துவங்கினார். தாம் கற்றுக்கொண்ட மருத்துவ அறிவு அனைத்தையும் பணியில் பயன்படுத்தினார். அவர், இரண்டு முறைகளில் மருந்தாக்க சீர்திருத்தம் செய்வதில் முன்நின்று, நவீனமயமாக்க மருந்தாக்க முறையில் பல்வகைகளை ஆராய்ந்தார். இதனால், விகுர் இன மருந்தாக்க முறையின் பின்தங்கிய நிலை மேம்பட்டுள்ளது.

தவிரவும், நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு, பல்வகையான மருத்துவ இயல் ஆய்வுக்கட்டுரைகளை அவர் எழுதினார். சில கட்டுரைகள், சர்வதேச மருத்துவயியல் இதழ்களில் வெளியிடப்பட்டன. பாரம்பரிய விகுர் இன மருத்துவத்தையும், சீன பாரம்பரிய மருத்துவம் மற்றும் மேலை மருத்துவத்தையும் ஒன்றிணைத்து, கடினமான, சிக்கலான நோய்களுக்கான சிகிச்சை முறையை அலசி ஆராய்ந்தார். கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக, விகுர் இன மருந்தைப் பயன்படுத்தி, ரத்த கொதிப்பு, நீரிழிவு முதலிய நோய்களுக்குச் சிகிச்சை அளிப்பதில் குறிப்பிடத்தக்க பயனைப் பெற்றிருக்கின்றார்.

கடந்த 90ம் ஆண்டுகளின் துவக்கத்தில், கசகஸ்தான் அரசுத் தலைவர் னாசார்பயவ், சிங்கியாங்கின் உருமுச்சி நகரில் பயணம் செய்தார். அப்போது அவர் நோய்வாய்பட்டார். விகுர் இன மருத்துவம் பற்றி கேட்ட பின், விகுர் இன மருத்துவத்தால் தமது நோயைப் போக்க விரும்பினார். எனவே, மேமேதி ஹ்ஸ்மு இக்கடமையை ஏற்றுக்கொண்டார். அந்த நிகழ்ச்சியை மீண்டும் நினைவு கூர்ந்த போது உற்சாகத்துடன் அவர் கூறியதாவது:

"தொலைக்காட்சி மூலம் நான் அடிக்கடி னாசார்பயவ்வை கண்டுள்ளேன். ஆனால், அவரது நோய்க்கு சிகிச்சை அளிக்கும் கடமை எனது பொறுப்பில் இருப்பதால், எனக்கு கவலை உண்டு. நான் ஒருமருத்துவர். விகுர் இன மருத்துவத்தின் பாரம்பரிய முறையைக் கொண்டு அவருக்குச் சிகிச்சை அளிக்கவும், எனது விளக்கம் மூலம் அவர், விகுர் இன மருத்துவத்தை புரிந்து கொண்டு ஏற்றுக்கொள்ள செய்திடவுமான இவ்வாய்ப்பு அற்புதம்" என்றார்.

1  2  3