 பாம்பு ஆராய்ச்சி பல்கலைக்கழகம்
இந்தியாவின் தலைநகரான புதுதில்லியின் புற நகரில் பாம்பு ஆராய்ச்சி பல்கலைக்கழகம் ஒன்று அமைந்துள்ளது. பாம்பு வேட்டையாடுவது, பாம்பு வளர்ப்பு, பாம்புகடிக்கு சிகிச்சை பாம்பு மருந்து தயாரிப்பது உள்ளிட்ட துறைகளில் இப்பல்கலைக்கழகத்தில் கற்பிக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் சுமார் 200 மாணவர்கள் இதில் சேர்க்கப்படுகின்றனர். பள்ளிக்காலம் 3 ஆண்டுகள்.
பாலாடை கட்டி தயாரிக்கும் பல்கலைக்கழகம்
ஸ்விட்சர்லாந்து நாட்டின் தலைநகரான பர்னியில் அரசு பாலாடை கட்டி தயாரிக்கும் சிறப்பு பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவியுள்ளது. பாலாடை கட்டி தயாரிக்கும் நிபுணர்களை அது சிறப்பாக பயிற்றுவித்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து வரும் மாணவர்களும் இதில் பயில்கின்றனர். ஸ்விட்சர்லாந்து நாட்டில் தயாரான பாலாடை கட்டி உலக புகழ் பெற்றதாகும்.
1 2 3
|