
ரயில் வண்டி பல்கலைக்கழகம்
அமெரிக்காவில் பிரான்க்லின் நகரிலிருந்து போஸ்டனுக்குச் செல்லும் ரயில் வண்டியில் மக்கள் நாள்தோறும் வேலைக்குச் செல்கிறார்கள். இரு நகரங்களிடை தூரம் 40 கிலோமீட்டர். போய் வர இரண்டு மணி நேரம் செலவாகும். பிரான்க்லின் நகரில் அமைந்துள்ள பல்கலைக்கழகம் ஒன்றின் பொறுப்பாளருக்கு புதிய யோசனை ஒன்று ஏற்பட்டது. இவரது ஆலோசனையுடன் ரயில் வண்டி பல்கலைக்கழகம் ஒன்று தற்போது நிறுவப்பட்டுள்ளது. சிறப்பு ரயில் பெட்டி ஒன்று வகுப்பறையாக பயன்படுத்தப்படுகின்றது. இச்செய்தி அறிவிக்கப்பட்டதும் நீ முந்தி நான் முந்தி என்று பலர் சுறுசுறுப்பாக விண்ணப்பம் செய்தனர். ஒவ்வொரு நாள் அதிகாலையினும் இரவிலும் ரயில் வண்டி புறப்பட்டதும் சிறப்பு ரயில் பெட்டியில் பேராசிரியர்கள் பாடம் சொல்லிக்கொடுப்பார்கள். ரயில் வண்டி நிறுத்தம் அடைந்ததும் வகுப்பு நிறைவடையும். ஒரு சல்வி ஆண்டு பகுதி பாடம் கற்றுமுடிக்கும் போது மாணவர்களுக்கு மூன்று கல்வி மதிப்பெண் கிடைக்கும். தற்போது பொருளியல், விற்பனவு தொழில், சமூக உறவியல் உள்ளிட்ட துறைகள் இப்பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டுள்ளன.
திராட்சை மது பல்கலைக்கழகம்
ஜெர்மனியில் புகழ்பெற்ற திராட்சை மது பல்கலைக்கழகம் ஒன்று உள்ளது. திராட்சை மதுவின் வளர்ச்சி வரலாறு, அதன் தயாரிப்பு பற்றிய தத்துவம், சுவை பார்ப்பது உள்ளிட்ட பயிற்சி நெறிகள் நடத்தப்படுகின்றன. இப்பல்கலைக்கழகம் 1964ம் ஆண்டில் நிறுவப்பட்டது. இது வரை, 26 நாடுகளைச் சேர்ந்த 1000க்கும் அதிகமான நிபுணர்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்.
1 2 3
|