
கோமாளி பல்கலைக்கழகம்
அமெரிக்காவின் பிஃளோரிடா மாநிலத்தின் வெனிஸ் நகரில் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த கோமாளி பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. 1968ல் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகத்தில் பல சிறப்பு தொழில் கோமாளிகள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளார்கள். ஒவ்வொரு ஆண்டு குளிர்காலத்திலும் துவங்கும் இப்பல்கலைக்கழகத்தில் சேர விரும்புவோரின் வயது 17ஐத் தாண்ட வேண்டும். ஒரு மாணவரைப் பயிற்றுவிப்பதற்கு சுமார் 5000 அமெரிக்க டாலர் செலவாகிறது. ஆனால், மாணவர்கள் விடுதிக்கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும். நாள்தோறும் மாணவர்கள், முகக்கண்ணாடி மூலம், தமது முகத்தை ஆராய்ந்து தமது உருவத்தை தீர்மானிக்க கற்றுக்கொடுக்கப்படுகின்றனர். பொதுவாக சில வாரங்கள் பயிற்சி செய்து, பல முறை சோதனைகளுக்கு பிறகு தமக்குரிய கோமாளி முகத்தை படைக்கலாம். 1 2 3
|