
வெளிநாட்டவர் என்ற முறையில், 2008ஆம் ஆண்டில் நீங்கள் பெய்ஜிங்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டால், பெரிய சாலையிலும் சிறிய வீதியிலும் நடை போடும் போது, ஆங்கில மொழியில் உங்களிடம் வணக்கம் என்று சொல்லும் பொது மக்களை சந்திக்கலாம். அவர்கள் உங்களுக்கு வழியைக் காட்டலாம். தற்போது, நகரவாசிகள் அந்நியர்களுடன் பரிமாறிக் கொள்ளும் திறனை உயர்த்தி, 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளை வரவேற்கும் வகையில், அன்றாட ஆங்கில சொற்களை கிரகித்துக் கொள்ள நகரவாசிகளுக்கு பெய்ஜிங் மாநகராட்சி உதவி வழங்குகிறது.
பழைய மாநகரின் ஒரு பகுதியான Dong Si குடியிருப்பு பகுதியில் வாழும் மிக பெரும்பாலோர் சாதாரண மக்களாக இருக்கின்றனர். ஆங்கில மொழியில் பேசக் கூடிய மக்கள் மிகக் குறைவு. ஆனால், இந்த பிரதேசத்தில் பல சிதிலங்களும் பாரம்பரிய குடியிருப்பு வீடுகளும் இருப்பதால், ஒவ்வொரு நாளும் வெளிநாட்டவர்களை அவர்கள் சந்திக்கலாம். வளைந்த hu tongஇல் நுழைந்து, அந்நிய பயணிகள் சிலர் தொலைந்து போவதுண்டு. கடந்த காலத்தில் அந்நிய மொழி தெரியாததால், அங்குள்ள மக்கள் அவர்களுக்கு உதவி வழங்க முடியவில்லை. இப்போது, இந்த நிலைமை மாறிவிட்டது.

"ஒரு நாள் நான் வாழும் hu tongஇல் இரண்டு வெளிநாட்டவர் வந்தனர். அவர்கள் மிதிவண்டியுடன் தொடர்ந்து உள்ளே நடந்தனர். ஆனால், இந்த hu tong முட்டுச்சந்தியாகும். நான் அவர்களிடம் 'no, no' என்று சொல்லி, 'where' என்று கேட்டேன். 'Italy' என்று அவர்கள் கூறியதால், இத்தாலி மக்கள் என்பது எனக்கு தெரியும். 'go along, left, right' என்று நான் சொன்னேன். அவர்கள் தெரிந்து கொண்ட பின், 'thank you', 'bye-bye' என்று என்னிடம் கூறினார்கள். இந்த இரண்டு வாக்கியங்கள் மட்டுமே, பயன் தருவதாக நான் கருதுகின்றேன்" என்று ஹு அம்மையார் கூறினார்.
எமது செய்தியாளரிடம் இந்த நிகழ்ச்சி பற்றி கூறிய ஹு அம்மையார், பெய்ஜிங் Dong Si குடியிருப்பு பகுதியில் வாழ்கிறார். 3 திங்களுக்கு முன் குடியிருப்பு பகுதி ஆங்கில மொழி வகுப்பில் அவர் கலந்து கொண்டார். ஒவ்வொரு வார இறுதியிலும் 2 மணி நேரம் பாடம் கற்று கொடுக்கப்பட்ட போதிலும், கடந்த பாடத்தில் பயின்ற சொற்களையும் வாக்கியங்களையும் அவர் ஒவ்வொரு நாளும் படிக்கின்றார். வார நாட்களில் இந்த வகுப்பைச் சேர்ந்த மாணவர்களில் பெரும்பாலோர் கூட்டாக பயிற்சி செய்கின்றனர். ஏனென்றால், அவர்கள் அயல் வீட்டுக்காரர்கள் என்று மூதாட்டி ஹு செய்தியாளரிடம் கூறினார். 58 வயதான ஹு அம்மையர் இந்த வகுப்பில் 2வது இளம் மாணவர். மிகவும் வயதான மாணவர், துவக்கப் பள்ளியிலிருந்து ஓய்வு பெற்ற ஒரு ஆசிரியர். இவ்வாண்டு அவர் 83 வயதாகியுள்ளார். சில திங்களின் படிப்பு மூலம், எளிதான ஆங்கில சொற்கள் மட்டுமல்ல, ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் தொடர்பான ஆங்கில வாக்கியங்களையும் மூதாட்டி ஹு கற்று கொண்டுள்ளார்.
1 2 3
|