
ஆங்கில மொழி படிப்பு மீது இந்த முதியவர் ஆர்வம் கொள்கின்றனர். குறிப்பாக, தங்களது வாழ் நாட்களில் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்கு பங்காற்ற வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர்.
61 வயதான மூதாட்டி Zhi கூறியதாவது—
"ஒரு புறம், ஆங்கில மொழியைக் கற்று கொள்ள நான் விரும்புகின்றேன். மறு புறம், 2008 ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நமது பெய்ஜிங்கில் நடைபெறும். அப்போது வாய்ப்பு கிடைத்தால், அந்நிய விருந்தினருக்கு நான் சேவை புரிந்து, வழிக் காட்டியாக இருக்கலாம்" என்றார் அவர்.

முன்பு ஆங்கில மொழியைக் கற்று கொள்ளாத Zhi அம்மையார் 2 ஆண்டுகளுக்கு மேலான படிப்பு மூலம், பல வாக்கியங்களை ஆங்கில மொழியில் சொல்லலாம். 2008ஆம் ஆண்டில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கான தொண்டராக இருக்க அவர் எதிர்பார்க்கின்றார்.
தற்போது, பெய்ஜிங் மாநகரின் 100க்கும் அதிகமான குடியிருப்பு பகுதிகளில் 23 குடியிருப்பு பகுதிகள் Dong Si குடியிருப்பு பகுதி போல், ஆங்கில மொழி வகுப்பை நடத்தியுள்ளன. பெய்ஜிங் மாநகராட்சியின் திட்டத்துக்கு இணங்க, 2008ஆம் ஆண்டில் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெறும் போது, 40 லட்சம் முதல் 60 லட்சம் வரையான பெய்ஜிங் நகரவாசிகள் ஆங்கில மொழியில் பேச வேண்டும். இந்த எண்ணிக்கை பெய்ஜிங் மக்கள் தொகையில் சுமார் 30 விழுக்காடு வகிக்கிறது. இந்த குறியளவை நிறைவேற்ற, பெய்ஜிங் மாநகராட்சி அரசு சாரா மொழி பள்ளிகளுடன் ஒத்துழைத்து, பல தொண்டர்களுக்கு பயிற்சி அளிக்கிறது. அவர்களின் மூலம் ஆங்கில மொழியைப் பரவலாக்கும் பேரெழுச்சியை விரைவாக்கி, 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் அனைவரும் பெய்ஜிங் மாநகரின் திறப்பு மற்றும் நட்புறவை உணரச் செய்ய வேண்டும். 1 2 3
|