
"பெய்ஜிங் உங்களுடையது. பெய்ஜிங் என்னுடையது. பெய்ஜிங் அனைவருக்கும் உடையது. பெய்ஜிங் வருவதை வரவேற்கின்றோம். ஒரே உலகம், ஒரே கனவு என்று கூட்டாக சொல்வோமாக" என்று ஹு அம்மையார் ஆங்கில மொழியில் கூறினார்.
எண்ணெய் உற்பத்தி பொருட்களின் விற்பனையில் ஈடுபடும் Cao Fang அம்மையார், பெய்ஜிங் குடியிருப்பு பகுதி ஆங்கில வகுப்புக்கான தொண்டர்களில் ஒருவர். தற்போது பெய்ஜிங்கில் தன்னைப் போன்ற 300க்கு அதிகமான தொண்டர்கள் உள்ளனர் என்று செய்தியாளரிடம் அவர் கூறினார். பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்துக் கொண்ட அவர்கள் ஆங்கில மொழி அடிப்படையைக் கொண்டிருக்கின்றனர். மேலும், புகழ்பெற்ற ஒரு மொழி பள்ளியில் அவர்கள் தொழில் பயிற்சி பெற்றுள்ளனர். வார நாட்களில் அவர்கள் தங்களது வேலையில் ஈடுபடுகின்றனர். வார இறுதியில், பல்வேறு குடியிருப்பு பகுதிகளின் வகுப்பில் ஆங்கில மொழியைக் கற்று கொடுக்கின்றனர். குடியிருப்பு பகுதி வகுப்பைச் சேர்ந்த மாணவர்களில் மிக பெரும்பாலானோர் ஆங்கில மொழியைக் படிக்கும் அடிப்படையைக் கொண்டிருக்கவில்லை. ஆனால், படிப்பு மீதான ஆர்வத்தை அவர்களிடமிருந்து தாம் கற்று கொள்ளலாம் என்று Cao Fang கூறினார்.
"இந்த வயதான மக்களின் ஆங்கில மொழி நிலை பள்ளியில் உள்ள மாணவர்களின் நிலையை விட அவ்வளவு நன்றாக இல்லை. ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் பெய்ஜிங்கில் நடைபெறும் என்பதால், நகரவாசிகளின் ஆர்வம் மிகவும் அதிகம். அவர்கள் சிரமப்பட்டு பயில்கின்றனர்" என்றார் அவர்.
1 2 3
|