• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-09 16:30:31    
யாங் வ் சிங்கும் அவரது மஞ்சு இன அம்பும்

cri

சீனாவின் சிறுபான்மை தேசிய இனங்களில் ஒன்றான மஞ்சு இனம், முக்கியமாக வட சீனாவில் வாழ்கின்றது. வட கிழக்கு சீனாவின் லேங் நின் மாநிலத்தில் மிக அதிகமான மஞ்சு இனத்தவர்கள் வசிக்கின்றனர். வரலாற்றில், குதிரை முதுகிலுள்ள தேசிய இனம் என, மஞ்சு இனம் அழைக்கப்பட்டது. ஏனெனில், மஞ்சு இன மக்கள் அனைவரும், குதிரையேற்றம், அம்பு எய்தல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள். மஞ்சு இனத்தின் இந்த தனிச்சிறப்பியல்பினால், அவர்கள் அம்பு தயாரிப்பு நுட்பம் தரமானதாகியுள்ளது. ஆனால், சமூகத்தின் மாற்றம் மற்றும் வளர்ச்சியுடன், இத்தகைய நுட்பத்தை தேர்ந்து அறிந்தவர்கள் படிப்படியாகக் குறைந்து வருகின்றனர். பாரம்பரியமான, அம்பு தயாரிப்பு நுட்பத்தை நன்கு அறிந்த மஞ்சு இன கலைஞரை தங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம்.

பெய்சிங்கின் கிழக்குப்பகுதியைச் சேர்ந்த செள யாங் வட்டாரத்தின் ஒரு சிறு குடியிருப்பில், அவ்வளவு பெரியதற்ற அம்பு தயாரிப்பு களரியான "ஜிங் யுன் ஹங்" உள்ளது. இதில் நுழைந்ததும், அம்பு தயாரிப்பதற்கான பல்வகை மூலப் பொருட்கள் நிறைய காணப்படுகின்றன. சுவரில் பெரிய சிறிய அம்புகள் தொங்கவிடப்பட்டுள்ளன. முகத்தில் அடர்ந்த மீசை வளர்ந்த வயதானவர் ஒருவர், ஒரு பெரிய அம்பைத் தயாரித்துக் கொண்டிருக்கின்றார். இன்று தங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய அம்பு தயாரிப்பு கலைஞரான மஞ்சு இனத்தவர் யாங் வ் சிங், அவராவார்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பே, பெய்சிங்கில் அம்பு தயாரிப்பு தோற்றம் இருந்தது. யாங் குடும்பத்தின் "ஜிங் யுன் ஹங்", இத்தோற்றத்திலுள்ள சில பத்து அம்பு தயாரிப்பு கடைகளில் ஒன்றாகும். அப்போது, பெய்சிங்கில் வாழ்ந்த மஞ்சு இனத்தவர்கள் அடிக்கடி இங்கு வந்து அம்பு வாங்கியதால், வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது என்று யாங் வ் சிங் செய்தியாளரிடம் தெரிவித்தார்.

1  2  3