• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-09 16:30:31    
யாங் வ் சிங்கும் அவரது மஞ்சு இன அம்பும்

cri

பின்னர், கால மாற்றத்தில், அம்பு பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைந்தது. அப்போதைய அம்பு தயாரிப்பு தோற்றத்தில் உள்ள 40க்கும் அதிகமான குடும்ப கலைஞர்களில் யாங் குடும்பத்தினர்கள் மட்டுமே இத்துறையில் தற்போதும் ஈடுபடுகின்றனர்.

பள்ளியில் கல்வி பயின்ற போது, குடும்பத்தின் கைவினையைக் கையேற்ற வேண்டும் என்ற கருத்து உருவாயிற்று. யாங் வ் சிங் கூறியதாவது:

"எனது 14, 15ம் வயதில், என்றாவது ஒரு நாள் நானும் இத்தகைய அம்பினைத் தயாரிக்க வேண்டும்" என நினைத்தேன் என்றார்.

ஆனால், பல்வேறு காரணங்களினால், யாங் வ் சிங், அம்பு தயாரிப்பு கைவினையைக் கையேற்றும் தனது விருப்பத்தை நனவாக்கவில்லை. முதலில், அவர் ஒரு தொழிலாளராகப் பணிபுரிந்தார். பின்னர், வாடகைக் கார் ஓட்டினார். 1998ம் ஆண்டு வரை அவரது தகப்பனாரின் உடல் நிலை மென்மேலும் மோசமாகி வந்ததினால் தகப்பனாரின் கைவினையைக் கையேற்றாமலிருந்தால், சீனாவின் பாரம்பரியமான அம்பு தயாரிப்பு கைவினை மறைந்து விடும் என அவர் உணர்ந்து கொண்டார். எனவே வாடகைக் கார் ஓட்டுநர் பணியை கைவிட்டு, அம்பு தயாரிப்பு கைவினையை அதிகாரப்பூர்வமாகத் துவக்கினார்.

துவக்கத்தில் அவருகளுக்கு அவரது மனைவி உடன்படவில்லை.

"அவர் பிற பணியைக் கைவிடுவதை நானும் விரும்பவில்லை. காரணம், அப்போது இத்தொழிலில் ஈடுபடுவதற்கான எதிர்காலம், நம்பிக்கை ஆர்வம் தருபதாக இல்லை. அன்றி வியாபாரமும் அவ்வளவு சிறப்பானதாயில்லை. குடும்பத்தின் வாழ்க்கை செலவு என்னை மட்டும் சார்ந்தது. அம்பு தயாரிப்பதற்கான மூல பொருட்களை வாங்கும் பணத்தையும் நான் செலவழித்தேன். குடும்பத்தின் சேமிப்பும் முடிந்து போனது" என்றார்.

பின்னர், தனது கணவர், அம்பு தயாரிப்பதில் இவ்வளவு மூழ்கியிருப்பதை கண்டு மனமுருகிய மனைவி, கணவருக்காக மூலபொருட்களை வாங்குவதற்குப் பொறுப்பேற்றார்.

தகப்பனாரின் பயிற்சியுடன், யாங் வ் சிங் விரைவில் அம்பு தயாரிப்பு நுட்பத்தை கற்றுத்தேர்ந்தார். அவரது அம்புகள் சந்தையில் நன்கு விற்பனையாகின. சாதாரண அம்பு ஒன்றுக்கு ஓரிரு நூறு யுவான். சிலதுக்கு ஈராயிரம் யுவான் கிடைத்தது.

1  2  3