
யாங் வ் சிங் தயாரித்த மஞ்சு இன அம்பு, உள்நாட்டு வெளிநாட்டு அம்பு விரும்புவோரை ஈர்த்தது. அம்புகளை வாங்கி நாட்டுக்குக் கொண்டு போய் சேமிப்பவர்களைத் தவிர, தொலைத்தூரத்திலிருந்து வருகை தந்து, அம்பு தயாரிப்பு நுட்பம் பற்றி அவருடன் கலந்தாய்வு நடத்துபவர்களும் குறைவல்ல. இந்த பாரம்பரிய கைவினை நுட்பத்தில் அடங்கும் மஞ்சு இனப் பண்பாட்டினால் ஈர்க்கப்பட்டவர்கள், அவரது அம்பை விரும்புகின்றனர்.
மங்கோலிய இனத்தைச் சேர்ந்த பெ க் வே என்பவர், யாங் வ் சிங் தயாரித்த சில அம்புகளைச் சேமித்து வைத்துள்ளார். மஞ்சு இன அம்பு காட்டியுள்ள கம்பீரமும் விரிவும், மஞ்சு இனத்தவர்களின் மனதில் உள்ள துணிவைக்காட்டுபவை. மங்கோலிய இனமும் மஞ்சு இனமும் சீனாவின் வட பகுதியில் வாழ்கின்றன. மங்கோலிய இனத்தவர்களும், குதிரையேற்றத்திலும் அம்பு எய்வதிலும் தேர்ச்சி பெற்றவர்கள். இருப்பினும், இவ்வினத்தவர்களில், அம்பு தயாரிப்பு நுட்பத்தை அறிந்தவர்களின் எண்ணிக்கையும் மிகக்குறைவு.

"சீனாவின் மஞ்சு இனம் அம்பு தயாரிக்கும் நுட்பம் ஒப்பீட்டளவில் பாரம்பரியமானது. அவரது அம்பைப் பார்த்த பின், எங்கள் மங்கோலிய இனத்தின் அம்பு போல் பாரம்பரியமானது என நான் உணர்ந்து கொண்டுள்ளேன். ஆசிரியர் யாங் வ் சிங், இதனை மீட்டெடுக்க முடிந்தமை, ஒரு நல்ல விஷயம்" என்றார்.
இவ்வாண்டு, சீனா பரிந்துரை செய்து ஐ.நாவிடம் ஒப்படைத்த, பொருள் சாரா பண்பாட்டு மரபுச்செல்வங்கள் பெயர்ப்பட்டியலில் யாங் வ் சிங்கின் பாரமபரிய மஞ்சு இன அம்பும் சேர்க்கப்பட்டுள்ளது. சீனக் கலை ஆய்வகமும், ஆராய்ச்சியாளராக அவரை வரவழைத்துள்ளது. அத்துடன், யாங் வ் செங்கிற்கு அவரது கைவினை நுட்பத்தைக் காண்பிப்பதற்கான வாய்ப்புகளையும் வழங்கியுள்ளது. மேலும் வசதியான பணி நிலைமைகளையும் அவருக்கு வழங்குகிறது. இனிமேல், எழுத்து வடிவ மற்றும் ஒலி-ஒளி நாடாக்களைப் பதிவு செய்ய வேண்டும். பாரம்பரிய அம்பு தயாரிப்பு நுட்பத்தை பதிவாக்க வேண்டும். இவ்வாறு இந்நுட்பத்தைத் தேர்ந்தவர்கள் மரணமடைந்தாலும், பின்வரும் தலைமுறையினர் இந்த தரவுகளைப் பார்த்து இந்த கைவினை நுட்பத்தை மீட்டெடுக்க முடியும் என்று யாங் வ் சிங் கூறினார். 1 2 3
|