• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-13 10:56:07    
சிறிய மிருகங்களின் உடலில் சோதனை

cri
ராஜா......ஆராய்ச்சியாளர்கள் கிருமியற்ற அறையில் பணிபுரிவது மிகவும் கடினமானது. பல்வகை வழிமுறைகளில் சோதனை செய்து சோதனை முடிவுகளைக் கொண்டு ஆராய்ந்துள்ளனர். அவர்கள் சோதனை செய்வதற்கு கிட்டத்தட்ட பத்து லட்சம் முட்டைகளை பயன்படுத்தினர் என்று கோசின் நிறுவனத்தின் பொறுப்பாளர்களில் ஒருவரான திரு யின் வேய் துங் கிளக்கி கூறினார்..

கலை......பூர்வாங்க வெற்றி பெற்ற பின் ஆராய்ச்சியாளர்கள் சிறிய மிருகங்களின் உடலில் சோதனை செய்ய துவங்கினர். அடுத்த சில திங்களில் அவர்கள் முறைவே ஈராயிரத்துக்கும் அதிகமான வெள்ளை சுண்டெலிகளில் நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு சோதனை மேற்கொண்டனர்.

ராஜா....விளைவு எப்படி?

கலை......சிறப்பானது. வெள்ளை சுண்டெலிகளின் உடம்பில் தடுப்பூசியின் பயன் காணப்பட்டுள்ளது. பாதுகாப்பு தன்மை சிறப்பானது.

ராஜா.....அடுத்த முயற்சி எப்படி?

கலை......இதற்கு பின் நோய் கிருமியின் பெருகும் திறன், மருபுவழி நிதானப்பாடு, நோய் கிருமியை அழிக்கும் பயன், தயாரிப்பு நுட்பம் ஆகியவற்றில் ஆய்வாளர்கள் மேலும் தீவிரமாக ஆராய்ந்துள்ளனர். அவர்கள் உறுதிப்படுத்தியதோடு தடுப்பூசி மருந்து தயாரிப்புக்கான மூல விதை கிடங்கை நிறுவி சோதனைக்குத் தேவைப்படும் கிருமித் தயாரிப்பை நிறைவேற்றியுள்ளனர்.

ராஜா......எனக்கு புரிந்தது. கடந்த நவெம்பர் திங்களில் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் மனிதருக்கென பறவை காய்ச்சலை எதிர்த்து நிற்கும் தடுப்பூசி மருந்தின் ஆய்வுப் பணிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளனர். அப்படிதானே.

கலை......ஆமாம். கடந்த நவெம்பர் திங்கள் 16ம் நாள் சீன அரசின் உணவு மருந்து கண்காணிப்பு ஆணையத்தின் மதிப்பீட்டின் படி, சீனாவின் கோசின் என்னும் மருந்து தயாரிப்பு நிறுவனம் ஆராய்ந்து தயாரித்த மனிதருக்கான தடுப்பூசி மருந்தை மனிதரின் உடம்பில் செலுத்தி சோதனையிடும் முறை துவங்கியது.

1  2  3