
மஞ்சு இனம், சீனாவின் மூன்றாவது பெரிய தேசிய இனமாகும். இவ்வினத்தில் ஒரு கோடி மக்கள் இருக்கின்றனர். ஆனால், இப்போது, சீனாவில் மஞ்சு இன மொழியைப் பேசுவோரின் எண்ணிக்கை, நூற்றுக்குட்பட்டது. வெகு விரைவில் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளாவிடில், மக்களுக்கிடையில் மஞ்சு இன மொழி பரிமாற்றம், 5 முதல் பத்து ஆண்டுகளில் இல்லாமல் போகும் என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். மஞ்சு இனம் முக்கியமாக கூடிவாழும் பிரதேசமான வட கிழக்கு சீனாவின் ஹேலுங்கியாங் மாநிலத்தில், "மஞ்சு இன மொழியைக் காப்பாற்றும் நடவடிக்கை" மேற்கொள்ளப்பட்டுள்ளது. எங்களுடன் சேர்ந்து இதை அறிந்து கொள்ளுங்கள்.
ஹேலுங்கியாங் மாநிலத்தின் பு யிங் மாவட்டத்தின் சங்ஜியங்சின் கிராமம், மஞ்சு இனத்தவர்கள் கூடிவாழும் இடங்களில் ஒன்றாகும். அன்றி, முழுமையான மஞ்சு இன பழக்க வழக்கங்கள் பத்திரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ள ஒரே ஒரு இடமாகும். கிராமத்திலுள்ள ஆயிரத்துக்கும் அதிகமானோரில் 60 விழுக்காட்டினர் மஞ்சு இனத்தவர்களாவர். ஆனால், மஞ்சு இன மொழியைச் சரளமாகப் பேச வல்லவர்கள், சில பத்து பேர்கள் மட்டுமே. அன்றி, பெரும்பாலானோர், 70, 80 வயதுடைய முதியோர்கள்.
சு ஜிங் குவாங், குழந்தை காலத்திலிருந்தே இக்கிராமத்தில் வளர்ந்தவர். அவர் மஞ்சு இனத்தவர் என்றாலும், சீன மொழியான ஹன் இன மொழியைக் கற்று கொண்டுள்ளார். 2000ம் ஆண்டில், உயர் இடை நிலைப்பள்ளியில் பட்டதாரியாகி கிராமத்துக்குத் திரும்பி வேளாண்மையில் ஈடுபட்டுள்ளார். பாட்டியாரிடமிருந்து மஞ்சு இன மொழியை கற்றுக்கொண்டு, பரவலை இழக்கும் விளிம்பிலுள்ள மஞ்சு இன மொழியை நிலைநிறுத்த வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உண்டாயிற்று. அவர் கூறியதாவது:
"நான் முழுக்க முழுக்க மஞ்சு இனத்தவரே. தகப்பனார், தாய், பாட்டனார், பாட்டியார் அனைவரும் மஞ்சு இனத்தவர்களே. எனவே, எனக்கு இத்தகைய பொறுப்புணர்வு உண்டு" என்றார்.
1 2 3
|