
6 ஆண்டுகளுக்கு முன், தனது பேரன், மஞ்சு இன மொழியைக் கற்க விருப்பம் தெரிவித்ததை நினைவுகூர்ந்த போது, 80 வயதான மங் சு சிங் கூறியதாவது:
"பாட்டி நீங்கள் எனக்கு மஞ்சு இன மொழியைச் சொல்லிக்கொடுக்க வேண்டும். ஏனெனில், நாம் மஞ்சு இனத்தவரே." இவ்வாறே, நான் அவருக்கு மஞ்சு இன மொழியைச் சொல்லிக்கொடுக்கத்துவங்கினேன்" என்றார்.
அப்போழுது முதல், மங் சு சிங், பேரனின் குடும்ப ஆசிரியையாக மஞ்சு இன மொழியை வாய் மூலம் ஒலி நாடாக்களில் பதிவு செய்து சொல்லிக்கொடுத்தார்.
பல்லாண்டுகால முயற்சி மூலம் சு ஜிங் குவாங் பெரும் அளவு ஒலிநாடா மூல தரவுகளைச் சேகரித்துள்ளார். இது மட்டுமின்றி, அவற்றை நூலாக்கி வைத்தார். அவர், சரளமாக மஞ்சு இன மொழியில் பேசவும் மொழி பெயர்க்கவும் முடியவில்லை என்றாலும், கிராமத்திலுள்ள இளைஞர்களில் மஞ்சு இன மொழி பேசுவதில் தலைசிறந்தவராகினார்.

ஹேலுங்கியாங் மாநிலத்தின் பு யிங் மாவட்டத்தின் துணைத்தலைவர் செள கிங் சங் பேசுகையில், மஞ்சு இன மொழி பாதுகாப்பில் சங்ஜியங்சின் கிராமத்தின் தகுநிலை மிகவும் முக்கியம் என்று கூறினார். மஞ்சு இனம் என்பது, சீனாவின் இறுதியான நிலப்பரப்புத்துவ வம்சமான சிங் வம்சத்தை தோற்றுவித்த இனமாகும். எனவே, மஞ்சு இன மொழி, அப்போது அதிகமாக பேசப்பட்டிருந்தது. ஆனால், சிங் வம்சத்துக்குப் பின், மஞ்சு இன மொழி பேசுவோரும் இதை கற்றுக்கொள்வோரும் படிப்படியாகக் குறைந்து வந்தனர். இருப்பினும், சிங் வம்ச காலத்தில் பல உடன்படிக்கைகள், விதிகள் மற்றும் ரகசிய ஆவணங்கள் மஞ்சு இன மொழியில் பாதுகாக்கப்பட்டுள்ளன. எண்ணற்ற மதிப்புள்ள வரலாற்று தரவுகள் மஞ்சு இன மொழியியலாளர்களின் பற்றாக்குறை காரணமாக, மொழிபெயர்க்கப்பட முடியாததாகி விட்டன. இது பற்றி ஹேலுங்கியாங் பல்கலைக்கழகத்தின் மஞ்சு இன மொழி ஆய்வகத்தின் தலைவர் செள அ பின் அம்மையார் கூறியதாவது:
"அதிகமான முக்கியமான ஒப்பந்தங்கள், வெளிநாடுகளுடன் கையொப்பமிடப்படும் போது, இதர எழுத்துக்கள் அல்ல, மஞ்சு இன எழுத்துகளே. பயன்படுத்தப்பட்டன" என்றார்.
1 2 3
|