• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-16 10:10:23    
சீனாவில் மஞ்சு இன மொழி காப்பாற்றப்படும் நடவடிக்கை

cri

மஞ்சு இன மொழியைக் காப்பாற்றுவது என்பது, சீன வரலாற்றை ஆராய்வதற்கு அதிமுக்கியத்துவமும் மதிப்பும் வாய்ந்தது. சங்ஜியங்சின் கிராமம், இன்று மஞ்சு இன மொழியை ஆராய்ந்து கற்றுக்கொள்ளும் தளமாக மாறியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில், சீன மற்றும் வெளிநாட்டு மொழியியலாளர்கள், பலமுறை இங்கு வருகை தந்து, ஒலிப்பதிவு கருவி, ஒளிப்பதிவு கருவி ஆகியவற்றின் மூலம் பதிவு செய்துள்ளனர். கிராமத்திலுள்ள மதியோரிடமிருந்து மஞ்சு இன மொழியைக் கற்றுக்கொண்டுள்ளனர் என்று செள அம்மையார் செய்தியாளரிடம் தெரிவித்தார்.

2005ம் ஆண்டு பு யிங் மாவட்ட அரசு, சங்ஜியங்சன் கிராமத்தில் சீனாவின் முதலாவது மஞ்சு இன மொழி துவக்க நிலை பள்ளியை அமைத்தது. இம்மாவட்டத்தின் துணைத் தலைவர் செள சிங் சங் கூறியதாவது:

"இப்பள்ளிக்கூடம் துவங்கிய பின், குறைந்தது, மஞ்சு இன மொழி குறிப்பிட்ட காலத்துக்குள் வலுவடையும். அதே வேளையில் இதைக் கையேற்றுவோர் பலரும் பயிற்றுவிக்கப்படுவர்" என்றார்.

2000ம் ஆண்டு, சீனாவின் தொடர்புடைய வாரியத்தின் அங்கீகாரத்துடன் ஹேலுங்கியாங் பல்கலைக்கழகத்தின் கீழுள்ள மஞ்சு இன மொழி ஆய்வு மையம், உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமிருந்து மாணவர்களைச் சேர்க்கத் துவங்கியது. சீனாவில் மஞ்சு இன மொழியைக் காப்பாற்றுவதற்கான இயக்கம் நடைபெற்று வருகின்றது.


1  2  3