• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-21 21:17:00    
மருத்துவ மனையில் சிகிச்சை பெறுவது

cri

இன்றைய நிகழ்ச்சியில், நமது அன்பு நேயர் ஏ. எம், நஜ்முல் ஆரிபீன் கேட்ட கேள்விகளுக்குப் பதலளிக்கின்றோம்.

அவர் கேட்ட முதல் கேள்வி, சீனாவில் நோயாளிகள் எப்படி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்?

சீனாவில் நகரங்களில் ஊழியர்களும் தொழிலாளர்களும் நோய்வாய்ப்பட்டால் பொதுவாக சிகிச்சை பெற, மருத்துவ மனைக்குச் செல்கிறார்கள். அவர்கள் இலேசாக நோய்வாய்ப்பட்டால் முதலில் குடியிருப்புப் பிரதேசத்திலுள்ள சிறிய மருத்துவமனைக்குச் செல்வர். கடும் நோய்வாய்ப்பட்டால், பெரிய முன்னேறிய மருத்துவமனைகளுக்கு சிகிச்சை பெறச் செல்வார்கள். மக்களுக்கான மருத்துவச் சேவையை உத்தரவாதம் செய்து, சேவைத் தரத்தை உயர்த்தும் வகையில், இப்பொழுது நகரங்களில் பொதுவாக மருத்துவ காப்பீட்டு முறைமை நிறுவப்பட்டுள்ளது. நகரவாசிகளில் பொரும்பாலனோர் இந்த முறைமையில் சேர்ந்துள்ளனர்.

அடுத்து, கிராமங்களில் விவசாயிகளின் மருத்துவம் பற்றி சற்றுக் கூறுகின்றேன்.

கிராமங்களில் பொதுவாக மாவட்ட நகரங்களில் மட்டும் பெரிய மருத்துவமனைகள் இருக்கின்றன. வட்டங்களில் சாதாரண சுகாதார விடுதிகள் உள்ளன. கிராமங்களில் பொதுவாக கிளினிக் உள்ளது, அதில் இரண்டு மூன்று மருத்துவர்கள் உள்ளனர். விவசாயிகள் நோய் வாய்ப்பட்டால், சிகிச்சை பெற முதலில் சொந்த ஊரிலுள்ள மருத்துவர்களைச் சென்று பார்க்கலாம். சற்று கடுமையாக இருந்தால் அவர் வட்டத்திலுள்ள மருத்துவமனைக்கு அல்லது மாவட்ட மருத்துவமனைக்குச் செல்வார். ஆனால் இது சற்று தூரமாக இருக்கும். எனவே பொதுவாக நோய் கடுமையாக இல்லை என்றால், விவசாயிகள் நகரங்களுக்குப் போக விரும்புவதில்லை.

இப்பொழுது கிராமங்களில் கூட்டுறவு மருத்துவ முறைமை சோதனை முறையில் நடைமுறைப்படுத்தத் துவங்கியுள்ளது. பொரும்பாலான விவசாயிகள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

1  2  3