
2005ஆம் ஆண்டு நடைபெற்ற கிராமங்களில் புதிய கூட்டுறவு மருத்துவத்தின் பரிசோதனை பணி பற்றிய தேசிய கூட்டத்தில் சீனத் துணைத் தலைமை அமைச்சர் வூ யீ அம்மையார் உரைநிகழ்த்துகையில், முயற்சியை தீவிரப்படுத்தி, கிராமங்களில் புதிய கூட்டுறவு மருத்துவ முறைமையின் சீரான வளர்ச்சியை ஆக்கப்பூர்வமாக தூண்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த முறைமையிலிருந்து மென்மேலும் அதிகமான விவசாயிகள் நலன் பெற்றுள்ளனர். வரவேற்பு தெரிவித்துள்ளனர். அடுத்த இரண்டு ஆண்டுகளில், பரிசோதனை பணி மேற்கொள்ளப்படும் மாவட்டங்கள் வகிக்கும் விகிதம் முறையே 40 விழுக்காடாகவும் 60 விழுக்காடாகவும் அதிகரிக்கும் என்று வூ யீ கூறினார். 2006ஆம் ஆண்டு முதல், மத்திய அரசு நிதி நிறுவனம், மத்திய மற்றும் மேற்கு பிரதேசங்களில் கூட்டுறவு மருத்துவ முறைமையில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு விவசாயிக்கும் வழங்கும் உதவி தொகையை 20 யுவானாக அதிகரிக்கும். அதே வேளையில், மத்திய மற்றும் மேற்கு பகுதிகளில் விவசாயிகள் அதிகமாக இருக்கும் நகராட்சிப் பிரிவுக்கும் கிழக்குப் பகுதி மாநிலங்களின் இன்னல் மாவட்டங்களுக்கும் மத்திய அரசு நிதி நிறுவனம் உதவி தொகை வழங்கும், அத்துடன் நிதி உரிய நேரத்தில் வழங்கப்படுவதையும் இந்த நிதியை கூடிய அளவில் விவசாயிகளுக்கு பயன்படுத்துவதையும் உத்தரவாதம் செய்யும் என்றும் வூ யீ கூறினார்.
சீனாவில் தனியார் மருத்துவமனைகள் உள்ளனவா என்று நேயர் நஜ்முல் ஆரிபீன் கடைசியாக கேட்டார்.
தற்போது சீனாவில் தனியார் நடத்தும் மருத்துவமனைகள் பல உள்ளன. மருத்துவர்கள் குறிப்பிட்ட மருத்துவவியல் தகுதியை பெற்ற பின், அரசின் தொடர்புடைய சட்டங்களுக்கு இணங்க தனியார் மருத்துவமனைகளை நடத்தலாம். பல நகரங்களில் தனியார் மருத்துவமனைகள் உள்ளன. இவை அரசு மருத்துவமனைகளுக்கு குறை நிரப்புகின்றன. 1 2 3
|