• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-21 21:17:00    
மருத்துவ மனையில் சிகிச்சை பெறுவது

cri

நோயாளிகளின் மருத்துவச் செலவை அரசாங்கமே ஏற்றுக்கொள்கிறதா? என்று நஜ்முல் ஆரிபின் கேட்டார்.

இதை கூறுவதற்காக முதலில் நகரங்களிலுள்ள மருத்துவக் காப்பீடு பற்றி சொல்லுகின்றேன்.

மருத்துவக் காப்பீடு என்பது, அரசும் சமூகமும் சட்டத்தில் விதிக்கப்பட்ட குறிப்பிட்ட அளவிலான உழைப்பாளர்களுக்கு நோய் தடுப்பு, சிகிச்சை, காயமுற்றவரின் சிகிச்சை ஆகியவற்றுக்கான செலவையும் சேவையையும் வழங்கும் ஒரு வகை சமூக காப்பீட்டாகும். மருத்துவ காப்பீட்டு முறைமைகளில், நேரடியற்ற மருத்துவ காப்பீட்டு முறைமை, நேரடி மருத்துவ காப்பீட்டு முறைமை, அடிப்படை மருத்துவ கவனம் ஆகிய மூன்று பகுதிகள் இடம்பெறுகின்றன. தற்போது சீனாவில் நடைமுறையாக்கத்திலுள்ள மருத்துவ காப்பீட்டு முறைமை, அரசு நிறுவனங்கள் செயல்படுத்தும் பொது செலவு மருத்துவ முறைமையும், தொழில் நிறுவனங்கள் செயல்படுத்தும் உழைப்பு பாதுகாப்பு மருத்துவ முறைமையும் ஆகும். மருத்துவ செலவு அரசால் அல்லது தொழில் நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. 1980ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியிலிருந்து தனியாரும் ஒரு பகுதி செலவை ஏற்றுக்கொள்ளும் முறை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த மருத்துவ காப்பீட்டானது, சமூக முன்னேற்றம், உற்பத்தி வளர்ச்சி ஆகியவற்றின் தவிர்க்கப்பட முடியாத விளைவாகும். அதேவேளையில், மருத்துவ காப்பீட்டு முறைமை நிறுவப்பட்டு முழுமையாக்குவது, சமூக முன்னேற்றத்தையும் உற்பத்தி வளர்ச்சியையும் மேலும் தூண்டும். ஒரு புறம், மருத்துவ காப்பீட்டு முறைமையினால் உழைப்பாளர்களின் கவலை நீக்கப்பட்டு, அவர்கள் முழு மனதுடன் பணியில் ஈடுபடலாம். மறுப்புறம், உழைப்பாளர்களின் உடல்நலத்தையும், உழைப்பாளர்களின் சீரான உழைப்பையும் உத்தரவாதம் செய்யலாம்.

இப்பொழுது சீனாவின் கிராமங்களில் கூட்டுறவு மருத்துவ காப்பீடு பற்றி கூறுகின்றோம். கிராமங்களில், கூட்டாக நிதி திரட்டும் வழிமுறை மூலம், அதாவது, ஒவ்வொருவரும் திங்கள்தோறும் குறிப்பிட்ட தொகையை கட்டுவதன் மூலம் மருத்துவ காப்பீட்டுக்கான நிதியை உருவாக்கி காப்பீட்டு நிறுவனத்துக்கு வழங்கப்படும். காப்பீட்டு காலத்தில் ஒருவர் நோய்வாய்ப்பட்டால், அல்லது காயமுற்றால், அவர் குறிப்பிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். அதன் செலவின் 70 விழுக்காடு காப்பீட்டு நிறுவனம் ஏற்றுக் கொள்ளும். தனியார் 30 விழுக்காடு மட்டும் ஏற்றுக்கொள்வார். தற்போது கிராமங்களில் 16 கோடியே 30 லட்சம் விவசாயிகள் இந்த கூட்டுறவு மருத்துவ முறைமையினால் நலன் பெற்றுள்ளனர். இந்த முறைமை ஆண்டுதோறும் 20 விழுக்காடு என்ற வேகத்தில் கிராமங்களில் விரிவாகி வருகின்றது.

1  2  3