
மேற்கு சீனாவின் சிங்ஹ-திபெத் பீடபூமி, பல மலை சிகரத்தில் ஆண்டுதோறும் பனி மூடி கிடப்பதால், பனி அடர்ந்த பீடபூமி என சீன மக்கள் அழைக்கின்றனர். கழுகு போல் நீல வானில் பறந்து, குறிப்பாக, பனி அடர்ந்த பீடபூமி மேல் பறந்து செல்வது, அங்கு வசிக்கும் திபெத் இன யுவர்யுவதிகளின் எதிர்பார்ப்பாகும். இன்று, சில திபெத் இன இளைஞர்கள், சீன சிவில் விமான சேவை வரலாற்றில் முதலாவது தொகுதி திபெத் இன விமானிகள் என்ற முறையில், நீல வானில் பறந்து செல்கின்றனர். இன்றைய நிகழ்ச்சியில், இந்த திபெத் இன இளைஞர்கள் பற்றி அறிமுகப்படுத்துகின்றோம்.
5 ஆண்டுகளுக்கு முன், சிங்ஹ-திபெத் பீடபூமியிலிருந்து வந்த 5 திபெத் இன இளைஞர்கள், அருமையான எதிர்பார்ப்புடன் சுங் ஜிங் மாநிலத்தின் தலைநகர் செங் து வந்தடைந்தனர். அவர்கள் பெற்ற தலைசிறந்த மதிப்பெண் காரணமாக இந்நகரிலுள்ள சீன சர்வதேச விமான சேவை நிறுவனத்தின் தென்மேற்கு கிளையில் சேர்க்கப்பட்டனர். இது முதல், விமானிகளாவதற்கு அவர்கள் பாடுபட்டு வந்தனர்.
இன்று, இந்த திபெத் இன இளைஞர்கள் எவ்வாறு இருக்கின்றனர்? கடந்த 20 ஆண்டுகளில், அவர்கள், வெண்ணெய் தேனீர், மாட்டு ஆட்டு இறைச்சிகளை சாப்பிட்டார்கள். இப்போது, சமவெளியான செங் து நகரில் வாழ்வது எப்படி இந்த கேள்விகளுடன், எமது செய்தியாளர், அவர்கள் பணிபுரியும் சீன சர்வதேச விமான சேவை நிறுவனத்தின் தென் மேற்கு கிளையின் நான்காவது பறத்தல் அணி அமைந்துள்ள இடத்துக்கு சென்றார்.
முறையான சீருடை அணியும் 5 திபெத் இன இளைஞர்கள், கருப்பான தோல் நிறம், திடக்காத்திரமான உடல் உருவம், சரளமாக ஹன் இன மொழியை பேசும் திறன் கொண்ட அவர்கள், ஹன் விமானிகளுடன் ஒப்பீட்டுப் பார்க்கையில் பார்ப்பதற்கு வித்தியாசனமானவர்கள் அல்ல. இருப்பினும், பீடபூமியில் வாழ்வோரின் தாராள குணாம்சம், அவர்களின் வாழ்க்கைகளிலிருந்து உணர்ந்து கொள்ளலாம்.
1 2 3
|