• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-23 16:56:34    
திபெத் இன விமானிகள்

cri

திபெத்திலிருந்து வந்த இளைஞர் தாங் சன் செய்தியாளரிடம் பேசுகையில், குழந்தை காலத்திலிருந்தே விமானியாக வேண்டும் என கனவு ஏற்பட்டதாகக் கூறினார். அவர் கூறியதாவது:

"நான், லாசா பிரதேசத்தைச் சேர்ந்தவர். இதர குழந்தைகளைப் போலவே, கழுகு போல் வானில் பறக்க வேண்டும் என சிறு வயதிலிருந்தே விரும்பினேன்" என்றார்.

விமான சேவை நிறுவனத்தில் பணிபுரியத் துவங்கிய பின், மூன்றரை ஆண்டுகளில், செங் து நகரிலுள்ள சீன சிவில் விமான சேவை பறத்தல் கல்லூரியில் படித்த போது, பறத்தல் பற்றிய அறிவையும் இதர 20க்கும் அதிகமான தத்துவ சிறப்புத்தொழில் பாடங்களையும் அவர்கள் முறையாகப் படித்தனர். கண்டிப்பான பயிற்சி மூலம் சீன சிவில் விமான சேவை தலைமை பணியகத்தின் பல்வகை திறன் ஆய்வுகளில் அவர்கள் அங்கீகரிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு, அவர்களின் விருப்பம் நனவாகி, சீன சர்வதேச விமான சேவை நிறுவனத்தின் தென் மேற்கு கிளையின் விமானிகளாக மாறினர்.

பறத்தலியல் கல்லூரியிலிருந்து தங்குதடையின்றி பட்டதாரியாகினாலும், சீரான சிவில் விமான சேவை விமானிகளாக வளர வேண்டுமாயின், இந்த 5 திபெத் இன இளைஞர்கள் கடினமாகப் பாடுபட வேண்டும். நான்காவது பறத்தல் அணியின் பொறுப்பாளர் செள லின் பேசுகையில், பயிற்சியின் போது அவர்கள் கடினமாக உழைத்தனர். இருப்பினும் அவர்கள் மிகப் பெரும் முன்னேற்றமடைந்தனர். ஆனால், திபெத் பிரதேசத்தின் வளர்ச்சி, பெருநிலப்பகுதியுடன் ஒப்பிட்டுப்பார்க்கையில் பின்தங்கியதால், இந்த திபெத் இன விமானிகளின் பண்பாட்டு அறிவு, பெருநிலப்பகுதியின் விமானிகளுடன் ஒப்பிட்டுப்பார்க்கும் போது இடைவெளி நிலவுகின்றது.

"இந்த விமானிகளின் தற்போதைய இன்னல்களில், தொழில் நுட்பத்தில் கற்றுக்கொண்டு தேர்ந்து பயன்படுத்தும் திறன், பெருநிலப்பகுதியின் மாணவர்களுடன் ஒப்பிட்டுப்பார்க்கையில் அவர்கள் பின்தங்கிய நிலையில் இருக்கின்றனர். மற்றது, அந்நிய மொழி பிரச்சினை கடினம்" என்றார்.

இந்த திபெத் இன விமானிகள் வெகு விரைவில் புதிய பணி மற்றும் வாழ்க்கைச்சுற்றுச்சூழலை புரிந்து பழகுவதற்கு உதவி அளிக்கும் வகையில், சீன சர்வதேச விமான சேவை நிறுவனத்தின் பறத்தல் பகுதி, அனுபவமிக்க பறத்தல் பயிற்சியாளர்களைத் தேர்ந்தெடுத்து, இத்திபெத் இன விமானிகளுடன், ஒருவருடன் ஒருவர் உதவி செய்தனர்.

1  2  3