• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-23 16:56:34    
திபெத் இன விமானிகள்

cri

"திபெத் இனத்தின் பண்பாட்டு மற்றும் வாழ்க்கை பழக்க வழக்கங்களுக்கு மதிப்பு அளிக்கின்றோம். தவிரவும், அவர்கள் பறத்தலைக் கற்றுத்தேர்வதற்காக மேலதிக வாய்ப்புகளை வழங்குகின்றோம். விமான இயக்குநர்-ஊழியர்களுக்கு முன், அவர்கள் தத்தமது எண்ணங்களை தெரிவிக்க வசதியில்லை என்பதால், ஹன் இன இளைஞர்களை அவர்களுடன் உரையாட அனுப்பினோம். கருத்து பரிமாற்றத்தின் மூலம், அவர்கள் விரைவாக இங்குள்ள சுற்றுச்சூழலை நன்கு தெரிந்துள்ளனர்" என்றார்.

மற்றொரு திபெத் இன இளைஞர் ஜிங்லாங் தோஜிங் செய்தியாளரிடம் பேசுகையில், அவர்கள் 5 பேரும், சகாக்களின் உதவியுடன், விமானங்களை அதிகாரப்பூர்வமாக ஓட்டுவதற்கான "துணை விமானி" என்ற அட்டையைப் பெற்றிருப்பதாகக் கூறினார். இருப்பினும், மகிழ்ச்சி அடைவது தவிர, மேலும் பணியை செவ்வனே செய்ய, முன்பை விட மேலும் கண்டிப்பான, கடினமான பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்று அவர்கள் உணர்ந்து கொண்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

"முன்பு விமானியாக இருக்க வேண்டும் என நினைத்தேன். விமானத்தை ஓட்டி பறப்பது, மிகவும் சுதந்திரமான உணர்வு என நினைத்தேன். ஆனால், இப்போது விமான பறத்தல் மீதான அன்பு, மேலும் அதிகமான ஒருவகை பொறுப்பு தானே, பாதுகாப்பை எவ்வாறு உத்தரவாதம் செய்வது பணியை எப்படி சீராக மேற்கொள்வது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்" என்றார், அவர்.

இப்போது, லாசா விமான குழுவுடன் பறக்கும் போதெல்லாம், தமது ஊரை பார்க்க முடியும். அன்பு தற்பெருமை என்ற உணர்வு எனது மனதில் தாண்டவமாடுகின்றது என்று அவர் சொன்னார்.

"இப்போது எனது மிகப் பெரும் கனவு, வெகு விரைவில் ஒரு விமானத் தலைவராக இருக்க வேண்டும் என்பதாகும். நானே உண்மையில் விமானத்தை ஓட்டி சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டும்" என்றார்.

நீல வானில் மிகவும் துணிவான "கழுகு" ஆக இருக்க, சராசரியாக 25 வயதுடைய இந்த ஐந்து இளைஞர்கள், தொடர்ந்து பாடுபட்டு வருகின்றனர். திபெத் இன இளையர்களின் சிறப்பான உடல்நலம் முதலிய காரணிகளால், இனிமேல் சிவில் விமான சேவைத் துறை, மேலதிகமான திபெத் இன இளைஞர்களை விமானிகளாக சேர்க்க திட்டமிட்டுள்ளது என, சீன தேசிய சிவில் விமான சேவை தலைமை பணியகத்திலிருந்து எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


1  2  3