• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-30 08:51:46    
புயி இன மக்களின் புதிய வாழ்க்கை

cri

Hua Xi டிஸ்டெக்ட்

பு யி இனம், தென் மேற்கு சீனாவின் குவே சோ, யுன்னான் மற்றும் சு சுவான் மாநிலங்களில் வாழும் சிறுபான்மை தேசிய இனமாகும். அதன் 30 லட்சம் மக்கள் முன்பு முக்கியமாக நெல் பயிரிடுதல் முதலிய வேளாண் உற்பத்தியில் ஈடுபட்டிருந்தனர். கடந்த சில ஆண்டுகளில், சுற்றுலா, நீர்வாழ் உயிரின வளர்ப்பு உள்ளிட்ட தொழில்களை வளர்ப்பதன் மூலம் பல பு யி கிராமங்களில், வருமான அதிகரிப்பினால், மக்களின் வாழ்க்கை தரம் குறிப்பிடத்தக்கவாறு மேம்பட்டுள்ளது. இன்று, குவே சோவின் ஒரு சாதாரண பு யி கிராமமான ஷங் சே கிராமத்துக்கு தங்களை அழைத்துச் சென்று, பு யி இனத்தவர்களின் புதிய வாழ்க்கையை நேரில் உணர்ந்து கொள்ள செய்கிறோம்.

ஷங் சே கிராமம், குவே யாங் நகரின் Hua Xi டிஸ்டெக்ட்டின் ஒரு இயற்கை கிராமமாகும். குவே யாங் நகரப்பிரதேசத்திலிருந்து புறப்பட்டு, 15 நிமிடங்களுக்குள் அங்கு சென்றடையலாம். தெளிந்த நீர் ஓடி வரும் ஒரு சிறிய ஆறு முதலில் எமது செய்தியாளரின் கண்களில் தென்படுகின்றது. இது, Hua Xi டிஸ்டெக்ட்டில் புகழ் பெற்ற Hua Xi ஆறு ஆகும். ஆற்றங்கரையிலான பொழுதுபோக்குப் பண்பாட்டுச் சதுக்கத்தில், காற்று வாங்கவும் வல்ல சிறிய பந்தல் இருக்கின்றது. பயணிகள் உலா செல்லும் மர நிழலின் கீழுள்ள சிறிய பாதைகளும் நீள்கின்றன. பு யி இன பெண்கள் சிலர் இச்சதுக்கத்தில் கிராமவாசிகளுக்கு நடனமாடுகின்றனர். அவர்கள், இக்கிராமத்தின் ஓய்வு நேர அரங்கேற்ற குழுவினர்கள். செய்தியாளர்களிடம் அவர்கள் தெரிவித்ததாவது:

"சொந்தமாக தயாரித்த நடனம் ஆடுகின்றோம். அரங்கேற்ற குழுவில் மொத்தம் 30 பேர். ஆண்களும் பெண்களும் இடம்பெறுகின்றனர். கிராமவாசிகள் எங்கள் நிகழ்ச்சிகளை விரும்புகின்றனர். ஏனெனில், எல்லாம் எங்கள் இனத்தின் ஆடல் பாடல்களே!" என்றார்கள்.

1  2  3