
பு யி இனம்
இந்த பொழுதுபோக்கு பண்பாட்டுச் சதுக்கம், கடந்த ஆண்டு ஷன் சே கிராமத்தின் ஒரு லட்சத்துக்கும் அதிகமான நிதியுடன் கட்டப்பட்டது. வேளாண் உற்பத்தியில் ஈடுபடாத நேரத்தில், கிராமவாசிகள் இங்கு குழுமியிருந்து நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுகின்றனர். சதுரங்கம் விளையாடுகின்றனர். இரவில் கால நிலை சீராக இருக்கும் போதும் அவர்கள் வருவார்கள். எதிர்காலத்தில், கிராமவாசிகள் உடல் நிலை மேம்படுத்துவதற்காக, இந்த கிராமம், இங்கு உடல் நலத்துக்கான கருவிகளையும் வைத்துக்கொள்ளும்.
எமது செய்தியாளர்கள் ஓய்வு நேர அரங்கேற்ற நடிகர்களிடமிருந்து பிரியா விடை பெற்று முன்னேறுகையில், ஆற்று பரப்பில் பல வாத்துக்கள் நீச்சலடித்து விளையாடுவதைக் கண்டனர். சில பயணிகள் ஆற்றின் கரையில் மீன்பிடித்துக் கொண்டிருக்கின்றனர். பயணத்தில் துணைக்குச் சென்ற, Hua Xi டிஸ்டெக்ட்டின் கிராமப் பணிக்குப் பொறுப்பான Zhang Jun Fa கூறியதாவது:
"எங்கள் ஷங் சே கிராமத்தில் சுற்றுச்சூழல் எழிலானது. அன்றி, அசல் உதாரணமாக திகழும் பு யி இன கிராமமுமாகும். மக்களின் பழக்க வழக்கங்கள் எளிமையானவை. கிராமத்தில் நுழைந்த பின் அனைவரும் இவற்றை நேரில் உணர்ந்து கொள்ளலாம்" என்றார்.
விவசாய குடும்பத்தின் வாசலுக்கு முன்னால், அழகான பு யி இன பெண்கள் மூவர், விருந்தினரை வரவேற்கும் பாடலைப் பாடுகின்றார்கள். எமது செய்தியாளர்களை வீட்டிற்கு வரவேற்றனர். செய்தியாளர்களுடன் சென்ற ஷங் சே கிராமத்தின் பொறுப்பாளர் அறிமுகப்படுத்தியவாறு, இக்குடும்பம் முக்கியமாக ஓய்வு நேர சுற்றுலா சேவை புரிகின்றது. ஷங் சே கிராமவாசிகள் அதிக பணம் பெறுவதற்கான ஒரு முக்கிய வழிமுறை, இதுவாகும். இக்குடும்பத்தை எடுத்துக்காட்டாகக் கூறினால், ஒரு ஆண்டில் சுமார் நாற்பதாயிரம் யுவான் வருமானம் கிடைக்கின்றது.
1 2 3
|