• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-30 08:51:46    
புயி இன மக்களின் புதிய வாழ்க்கை

cri

செய்தியாளர்கள், இக்குடும்பத்தை விவரமாகப் பார்த்தனர். வீடுகள் புதிதாக பராமரிக்கப்பட்டன. உள்ளே, வர்ண தொலைக்காட்சிப்பெட்டி, இசைப் பெட்டி, நடன அறை, ஸ்நூக்கர் விளையாட்டு மேசை முதலியவை இருக்கின்றன. முற்றத்தில் மலர் புல் மரம் சீராக கிடக்கின்றன. சுற்றுச்சூழல் அருமையானது. உற்சாகமிருந்த பெண் உரிமையாளர் ரோ சொன், செய்தியாளர்களுடன் பேசுகையில் தெரிவித்ததாவது:

"ஆண்டுதோறும் வசந்த காலத்தில், விருந்தினர்கள் படிப்படியாக அதிகரித்து வருகின்றனர். நகரவாசிகள் இங்கு வந்து விவசாய குடும்ப உணவுகளைச் சாப்பிடலாம். புத்தம் புதிய காய்கறிகளை ருசி பார்க்கலாம். இங்கு காற்றும் தூய்மையானது. இப்போது நான் சில பழ மரங்களை நட்டு வளர்த்துள்ளேன். இவ்வாறு விருந்தினர்கள் மரங்களிடையே பொழுதுபோக்கில் ஈடுபடலாம். இலையுதிர்காலத்தில் பழங்களைப் பறித்தெடுத்து சுவை பார்க்கின்றனர். பேரிக்காய், ஆரஞ்சுப்பழம் திராட்சைப்பழம் முதலியவை இங்கிருந்து பறித்தெடுக்கப்பட முடியும்" என்றார்.

அவரின் வழிக்காட்டலுடன், நாங்கள் கிராமத்தின் மையத்தை நோக்கி சென்றோம். ஒவ்வொரு குடும்பத்துக்கும் செல்லும் பாதைகளேல்லாம், சிமேந்து பாதைகளாகும். சீரானவை, சுத்தமானவை. முன்பு, கிராமத்தின் சுற்றுச்சூழல் மோசம். இப்போது வாழ்க்கை வளமடைந்துள்ளதால், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கிராமவாசிகள் கவனம் செலுத்துகின்றனர். எடுத்துக்காட்டாக, கடந்த ஆண்டில், கிராமத்தில், மீத்தேன் வாயு தொட்டி, கூப்பைக்கூளத் தொட்டி, தூய்மைக்கேட்டு வெளியேற்ற குழாய் ஆகியவை கட்டப்பட்டன. முழு கிராமத்தின் தோற்றத்தில் பெரும் மாற்றம் காணப்பட்டுள்ளது. இப்போது, கிராமவாசிகள் சுமுகமாக வாழ்கின்றனர். நகரவாசிகளும் இங்கு வந்து பார்த்து, சுத்தமென பாராட்டுகின்றனர். இதனால், மேலதிகமான பயணிகளை இங்கு ஈர்த்துள்ளதாக ரோ சொன் சொன்னார்.

பேசிக்கொண்டே கிராமவாசியான வாங் லு வீட்டுக்கு வந்தோம். அவரது குடும்பம், பன்றி வளர்ப்பில் ஈடுபடுகின்றது. இவ்வாண்டு தமது குடும்பம் 30க்கு அதிகமான பன்றிகளை வளர்த்துள்ளது. கணவன், போக்குவரத்தில் ஈடுபடுகின்றார். கடந்த ஆண்டு சுமார் நாற்பதாயிரத்துக்கும் மேலான யுவான் பெற்றுள்ளதாக வாங் லு தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளில், பல பு யி இன கிராமங்கள் சீராக வளர்ச்சி அடைந்துள்ளன. ஷங் சே கிராமம், அவற்றில் ஒன்று மட்டுமே என்று Hua Xi டிஸ்டெக்ட்டின் கிராமப்புறப்பணிக்குப் பொறுப்பான Zhang Jun Fa கூறினார். ஷாங் சிங் கிராமம் முதலிய சிறுபான்மை தேசிய இன கிராமங்கள், தனித்தன்மை வாய்ந்த பொருளாதாரத்தை வளர்ப்பதற்கு உதவி அளிப்பதற்காக, இனிமேல், Hua Xi டிஸ்டெக்ட் அரசு மேலும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று சாங் ஜிங் பா தெரிவித்தார்.


1  2  3