 அண்மையில், விவேகம் மற்றும் துணிவு மிக்க சாதாரண பல்கலைக்கழக மாணவர் ஒருவர் மூவரை காப்பாற்றினார். இது, சீன செய்தி ஊடகத்தின் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அவரின் பெயர் Xu Wei. Tian Jin தொழிற்துறை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தகவல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் கல்லூரியின் மாணவராவார்.
கடந்த ஆண்டு டிசம்பர் திங்கள் 27ஆம் நாள், Tian Jin தொழிற்துறை பல்கலைக்கழகத்தின் மாணவர்கள், வளாகத்தில் இறுதி தேர்வுக்கான தீவிர தயாரிப்பில் ஈடுபட்டனர். பிற்பகல் 4 மணி 15 நிமிடம், வளாகத்தில் உள்ள Pan ஏரியிலிருந்து 'உதவி உதவி' எனும் குரல் கேட்டது. தற்செயலாக அவ்வழியே சென்ற Xu Wei, கூச்சல் கேட்ட பின், சம்பவம் நிகழ்ந்த இடத்துக்கு ஓடினார். Pan ஏரிப் பரப்பு பெரியதாக இல்லை. ஆனால் நீர் ஆழமானது. இளைஞர்கள் இருவர் பனிக்கட்டி நீரில் தடுமாறிக்கொண்டிருந்தனர்.
இந்நிலைமையைக் கண்டு, Xu Wei தமது உயிர் பாதுகாப்பைப் பொருட்படுத்தாமல், ஒரு கையால் பனிக்கட்டி விளிம்பை இறுகப்பற்றியவாறு மற்றொரு கையால் நீரில் விழுந்த இளைஞரை பிடித்தார். திடீரென, பனி உடைந்ததும், Xu Weiயும், மற்றொரு இளைஞரும் பனி நீரில் வீழ்ந்தனர். ஆபத்தான நிலைமையின் முன்னிலையில், Xu Wei தமது நீச்சல் திறனை பயன்படுத்தி, அடுத்தடுத்து மூன்று இளைஞர்களை நீர் பரப்புக்கு மேல் ஏறினார். இதற்கு பின் Xu Wei நீர் பரப்புக்கு மேல் ஏற்றினார்.
ஆனால், Xu Weiயின் பாதி உடல் நீரிலிருந்த போது, பனி மீண்டும் உடைந்தது. அவர் மீண்டும் ஏரியில் வீழ்ந்தார். அவரின் இரு தோள், கைகள் இவற்றில் காயங்கள் ஏற்பட்டன. ரத்தம் வரத் தொடங்கியது. அவர் தன் வலியை பொறுத்துக்கொண்டு பயந்த குழந்தைகளுக்கு ஆறுதல் தெரிவித்தார். பயப்பட வேண்டாம். நான் மேலே ஏறுவது உறுதி. உங்களை காப்பாற்றவது உறுதி என்று அவர் கூறினார்.
1 2 3
|