• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-28 08:36:07    
பல்கலைக்கழக மாணவர் Xu Wei

cri

இறுதியில், உறுதியான உறைபனியை அவர் பிடித்து பற்றிக்கொண்டார். பின்னர், பனிப் பரப்பு மீது அவர் ஏறினார். அப்போது, அவருக்கு அருகிலிருந்த பனி அசையத் தொடங்கியது. மேலதிக ஆபத்து ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு, மர குச்சி ஒன்றை கொண்டு வருமாறு, காப்பாற்றியவர்களை அவர் கோரினார். இந்த மரக்குச்சியைப் பயன்படுத்தி, மூன்று இளைஞர்கள் அடுத்தடுத்து பனியிலிருந்து இழுக்கப்பட்டு, காப்பாற்றப்பட்டனர். Xu Wei களைப்படைந்தார். இவ்விடயத்துக்கு பின், நன்றி தெரிவிக்க, காப்பாற்றப்பட்ட இளைஞர்களின் பெற்றோர்கள் 1000 யுவானை கொடுத்தனர். Xu Wei அதை மறுக்க முடியாமல், Tian Jin மாநகரில் உள்ள மாணவர்களுக்கான உதவி நிதியத்துக்கு இந்த பணத்தை நன்கொடையாக வழங்கினார்.

22 வயதான Xu Wei, கிழக்கு சீனாவின் An Hui மாநிலத்து Chao Hu நகரில் பிறந்தார். அவரின் பொற்றோர் விவசாயிகளாவர். வேளாண் வயலில் பயிரிடுவது மூலம் அவர்கள் வாழ்க்கை நடத்தினர். அவரின் குடும்பத்தின் பொருளாதார நிலைமை சிறப்பாக இல்லை. அவருக்கு அண்ணன் ஒருவரும் தங்கை ஒருவரும் உண்டு. ஆனால், தமது குடும்பத்தின் வறுமை, Xu Weiஐ தடை செய்யவில்லை. அவர் நம்பிக்கை ஆர்வம் கொள்கின்றார். தன்னம்பிக்கை அவருக்கு உண்டு என அவரை அறிந்து கொண்ட அனைவரும் உணர்ந்து கொள்கின்றனர்.

2002ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் அவர் சேர்ந்ததும், மாணவர்களுக்கு அரசு வழங்கும் உதவித்தொகைக்காக, அவர் விண்ணப்பித்தார். 4 ஆண்டுக்கால கல்வி கட்டணம் கடன் என்ற முறையில் கிடைத்தது. கல்வி கட்டண பிரச்சினை தீர்க்கப்பட்ட பின், தமது வாழ்வுச் செலவைப் பெற, வேலை வாய்ப்பை தேடி அவர் பல்வேறு இடங்களை நாட துவங்கினார். "வீட்டில் கற்பிக்கும் பணியை"அவர் நாடினார். கற்பிக்கும் பணியில் அவர் மிகவும் ஈடுபட்டதால், அவரின் மாணவர்களின் வெற்றி விரைவாக உயர்ந்துள்ளது. பல குழந்தைகளின் பொற்றோர் அவருடன் தொடர்பு கொண்டனர். சில சமயங்களில், மூன்று கற்பிக்கும் பணிகளில் அவர் ஈடுபட்டார். கற்பிக்கும் கட்டணத்தை அதிகமாக்க சில பெற்றோர் முன்மொழிந்தனர். ஆனால், ஒரு மணிக்கு 10 யுவான் என்ற "குறைவான கற்பிக்கும் கட்டண வரையறையில்" அவர் உறுதியாக நிற்கின்றார்.

பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற 3 ஆண்டுகளுக்கு மேலான நேரத்தில், உணவு, ஆடைகள், அன்றாடத் தேவைப் பொருட்கள் ஆகியவற்றில் அவரின் செலவு மிக குறைவு. இத்தகைய நிலைமையில், முதலாவது பள்ளி ஆண்டின் நடுவில், பல்கலைக்கழகம் அவருக்கு வழங்கும் உதவித்தொகையை அவர் கண்ணியமாக வேண்டாம் என மறுத்தார். மற்ற மாணவர்களுக்கு இவ்வுதவி தொகையை அளிக்குமாறு ஆசிரியருக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். இதற்கு பின், எவ்வித உதவித்தொகைக்காகவும் அவர் விண்ணப்பிக்கவில்லை.

1  2  3