• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-28 08:36:07    
பல்கலைக்கழக மாணவர் Xu Wei

cri

Xu Weiயின் கல்வி சாதனை வகுப்பில் முன்னணி வகிக்கின்றது. பாடம் நடக்கும் போது, வகுப்பறையில் முன்வரிசையில் உள்ள குறிப்பிட்ட இடத்தில் அவர் அமர்ந்தார். அவர் கூர்மையாக கவனித்து குறிப்புகளை எடுத்தார். ஆசிரியரின் கேள்விகளுக்கு அவர் ஆக்கப்பூர்வமாக பதிலளித்தார். வகுப்புக்கு அப்பால், அவர் நூலகத்தில், கல்வித்திட்டம் தொடர்பான தரவுகளை ஆராய்ந்தார்.

அவரின் கல்வி சாதனை சிறந்தது. தவிர, அவர் அடிக்கடி மற்றவருக்கு உதவி அளிக்க விரும்புகிறார் என்று பொதுவாக கருதப்பட்டது. பாடத்தில் தோன்றிய கேள்விகள் பற்றி சக மாணவர்கள் அவரை கேட்க விரும்பினர். தேர்வுக்கு முன், அவரின் குறிப்புகள் சக மாணவர்களின் வரவேற்பை பெற்றுள்ளன. சக மாணவர்களின் கேள்விகளுக்கு அவர் எப்போதும் பொறுமையுடன் பதிலளித்தார். ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களின் பார்வையில், Xu Wei எளிமையானவர், கள்ளம்கபடமற்றவர் சுய நம்பிக்கை உள்ளவர் என மதிக்கப்படுகிறார். கடந்த சில ஆண்டுகளில், பல்கலைக்கழகத்தில் முதலாவது நிலை படிப்புதவித்தொகையையும் பல அறிவியல் தொழில் நுட்ப மற்றும் புத்தாக்க போட்டியின் விருதுகளைம் Xu Wei பெற்றார்.

Pan ஏரியில் மூவரைக் காப்பாற்றிய பின், அவர் அகந்தை கொள்ளவில்லை. மற்றவர்கள் இது பற்றி அவருடன் குறிப்பிட்ட போது, அவர் மேலதிகமாக பேச விரும்புவதில்லை. ஆனால், தமது எதிர்காலம் குறித்து, Xu Wei அதிகமாக கூறுகின்றார். எதிர்காலத்தில் தாய்நாட்டின் அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்றத்துக்காக, பட்டப்படிப்புக்கென அவர் தொடர்ந்து கல்வி பயின்று, தமது அறிவு கட்டமைப்பை மேம்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்தார்.


1  2  3