
தெற்கு சீனாவின் குவாங் சி சுவாங் இனத் தன்னாட்சிப்பிரதேசத்தில் தனித்தன்மை வாய்ந்த ஒரு தேசிய இனமான து யோங் இனம் வாழ்கின்றது. யோங் இனத்தின் ஒரு கிளையாக விளங்கும் இவ்வினத்தின் மக்கள் தொகை, ஆறாயிரத்துக்கு மேலாகும். தலைமுறை தலைமுறையாக அவர்கள் உயர்ந்த மலைகள்-குன்றுகளில் வாழ்ந்து வருகின்றனர். நீண்டகாலமாக வெளி உலகத்துடன் தொடர்பு கொள்ளாமல் இருப்பதால், இவ்வினத்தின் உற்பத்தித்திறன் மற்றும் பொருளாதார தரம் தாழ்ந்த நிலையில் உள்ளன. ஆனால், கடந்த சில ஆண்டுகளில், அரசின் உதவியுடனும் சொந்த முயற்சியுடனும், து யோங் இன மக்களின் வாழ்க்கை நிலை பெரிதும் மேம்பட்டுள்ளது. இன்றைய நிகழ்ச்சியில், து யோ இன மக்கள் கூடிவாழும் குவாங் சி சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் ஹ சோ நகரில் நுழைந்து அங்குள்ள து யோங் இனத்தவர்களின் தற்போதைய வாழ்க்கையை நேரில் உணர்ந்து கொள்ள தங்களை அழைத்துச் செல்கின்றோம்.
ஹ சோ நகரிலுள்ள ஸ் துங் கிராமம், து யோங் இனத்தவர்கள் கூடிவாழும் ஒரு கிராமமாகும். 1800க்கும் அதிகமான கிராமவாசிகள் இங்கே உள்ளனர். கடல் மட்டத்திலிருந்து உயர்ந்த இடத்திலும் பெரிய மலையிலும் அமைந்துள்ள இக்கிராமத்தின் சுற்றுப்புறங்களில் மலை பாதைகள் வளைந்து செல்கின்றன. இருப்பினும் எமது செய்தியாளர் ஸ் துங் கிராமம் வந்த அந்நாளில், சாதாரண நாட்களில் அமைதியாக காணப்படும் இச்சிறிய கிராமத்தில் விறுவிறுப்பு காணப்பட்டது. து யோங் இனத்தவர்களின் திருமணம் விழா அங்கே நடைபெற்றது.
திருமண விழா நடைபெறும் இடத்தில் விருந்தினர்கள் நிறைய காணப்படுகின்றனர். விருந்தோம்பல்மிக்க உரிமையாளர்கள், நீண்ட மேசையில் உணவுப் பொருட்களை வைத்து வருகை தந்துள்ள விருந்தினர்களை வரவேல்கின்றனர். மணமகன் புங் தி தே குடும்பத்தினர்கள், விருந்தினர்களுக்கு தேனீர், மது கொடுத்து இனிமையான மது வாழ்த்து பாடல்களை பாடி மகிழ்கின்றனர்.
1 2 3
|