• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-07 16:15:33    
து யோங் இனத்தவர்களின் வளமான வாழ்க்கை

cri

பண்டைக்காலம் தொட்டு, திருமண விழாவுக்கான விருந்து, து யோங் இனத்தவர்கள் பெரிதெனக் கருதும் விடயமாகும். அவர்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. அதாவது, திருமண விழா நாளில் பொருளாதார திறனில்லாமல் விருந்து அளிக்க முடியவில்லை என்றாலும், அவர்கள் முதியோரான பிறகு கூட திருமண விழாவுக்கான விருந்தை அளித்து குறைநிறைப்பலாம். சிலர் வாழ்ந்த போது விருந்து அளிக்க முடியாமல் போனால் தம்பதிகள் இருவரும் மரணமடைந்த பின்னர் அவர்களின் பிள்ளைகளால் இம்முக்கிய விடயம் நிறைவேற்றப்படும். எனவே, இதற்காக சிலர் வாழ்நாள் முழுவதிலும் கடினமாக பாடுபட்டனர். விருந்து அளிக்க சிலர் கடனையும் வாங்கும் அளவுக்குச் சென்றனர்.

அண்மையில் உள்ளூர் அரசின் முன்மொழிவுடன், து யோங் இனத்தவர்களின் திருமண விழா விருந்து, பெரிதும் சீர்திருத்தப்பட்டது. இச்சீர்திருத்தத்தினால், து யோங் இனத்தின் இளம் ஆண்களும் பெண்களும் பாரம்பரிய கருத்தை மாற்றினர். சீர்திருத்தத்துக்கு முன், திருமணம் செய்யும் இரு தரப்பினர்களும் விருந்து அளிக்க வேண்டும். சுமார் 5 நாட்கள் இரவும் பகலும் இவ்விருந்து நடைபெற வேண்டியிருக்கும். விருந்தின் போது செலவிடப்பட்ட தானியம், மது, இறைச்சி ஆகியவை, குடும்பத்தினர் சில திங்கள் சாப்பிடுவதற்கு போதுமானவை. சீர்திருத்தத்துக்குப் பின், இவ்விருந்து இரண்டு நாள் மட்டும் நடைபெறும். இதனால், செலவு பெரிதும் குறைந்தது.

திருமண விருந்து சீர்திருத்தத்துக்கு து யோங் இனத்தின் இளம் ஆண்களும் பெண்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். திருமண விழா நடத்தும் ப்ங் தி தே அவர்களில் ஒருவராவார். அவர் கூறியதாவது:

திருமண விருந்து சீர்திருத்தம் பற்றிய தங்கள் கருத்து என்ன? என்று எமது செய்தியாளர் கேட்டததற்கு "நல்லது" என்று மனமகன் பதிலளித்தார்.

1  2  3