
மேலும் அதிகமானவர்கள், சிக்கனப்படுத்தப்பட்ட நேரத்தையும் பணத்தையும் பயன்படுத்தி உற்பத்தியை வளர்க்க முடியும் என்பது, திருமண விருந்து சீர்திருத்தத்தின் மிகப் பெரும் நல விடயமாகும் என்று மணமகள் பாங் மை செங் கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:
"திருமண விருந்து சீர்திருத்தம், குடும்பத்தின் சுமையைக் குறைத்துள்ளது. து யோங் இன இளைஞர், இளம் பெண்கள் நேரத்தைப் பயன்படுத்தி, மேலதிகமானவற்றைக் கற்றுக்கொள்ளலாம். உற்பத்தியில் ஈடுபலாம். மணமகனுக்கும் மணமகளுக்கும் இது மிகவும் நல்லது" என்றார்.
ஸ் துங் கிராமத்தில் எமது செய்தியாளர், மேலும் அதிகமான து யோங் இனத்தவர்கள் தத்தமது ஆற்றலைச் சார்ந்து பொருளாதாரத்தை வளர்ப்பதைக் கண்டார். புதிய நெடுஞ்சாலை கட்டப்பட்டதுடன், மலைகளில் பறித்த மருந்து மூலிகைகளை கிராமவாசிகள் வாகனங்கள் மூலம் நகரங்களுக்கு கொண்டு சென்று விற்பதன் விளைவாக அவர்களின் வருமானம் அதிகரித்துள்ளது. மேலும், அரசு மற்றும் உள்ளூர் அரசாங்கங்களின் உதவியும் தொடர்ந்து கூடுதலாகியுள்ளது. இதனால், து யோங் இனத்தவர்களின் வாழ்க்கை நிலை தெள்ளத்தொளிவாக மேம்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, "ஒவ்வொரு கிராமத்திலும் வானொலி மற்றும் தொலைக்காட்சி வசதி" என்ற திட்டப்பணியினால், து யோங் இன மக்கள், வெளியுலகத்தைப் படிப்படியாக புரிந்து கொள்ளத் துவங்கினர்.

ஸ் துங் கிராமத்தைப் போலவே, கடந்த சில ஆண்டுகளில், உள்ளூரிலுள்ள இதர து யோங் இன கிராமங்களிலும் மாபெரும் மாற்றம் காணப்பட்டுள்ளது. இம்மாற்றங்கள் பற்றி, ஸ் துங் கிராமம் அமைந்துள்ள ஹ சோ நகரின் பா பு வட்டாரத்தின் ஒரு பொறுப்பாளரான லியு சிங் ஆர்வத்துடன் கூறியதாவது:
"கடந்த சில ஆண்டுகளில், யோங் இனத்துக்கான மேல் வட்டாரத்தின் உதவி அதிகரித்துள்ளது. பாதைகள் கட்டப்பட்டுள்ளன. யோங் இன மக்கள், மருந்து மூலிகை, பொருளியல் பயிர்கள் ஆகியவற்றை பெரிதும் வளர்ப்பதினால், அவர்களின் வருமானம் அதிகரித்துள்ளது. மலைப்பிரதேசத்தின் வாழ்க்கையும் படிப்படியாக மேம்பட்டுள்ளது. மேலும் அதிகப்படியான யோங் இனத்தவர்கள் மோட்டார் வாகனங்களையும் வண்ண தொலைக்காட்சிப் பெட்டிகளையும் வாங்கி வளமான வாழ்க்கை நடத்துகின்றனர்" என்றார்.
பொருளாதாரத்தை வளர்ச்சியுறச்செய்வதில் து யோங் இனத்துக்கு உதவிடும் அதே வேளையில், சொந்த இனத்தின் தனித்தன்மை வாய்ந்த பழக்க வழக்கங்களை நிலைநிறுத்துமாறு உள்ளூர் அரசு து யோங் இனத்தவர்களுக்கு ஊக்கமளிக்கின்றது. தவிரவும், இந்த பழக்க வழக்கங்களைச் சார்ந்து, சுற்றுலாத்துறையை வளர்க்க வேண்டும் என்றும் அவர்களுக்கு ஊக்கமளிக்கின்றது. தற்போது, ஹ சோ நகரிலுள்ள ஒவ்வொரு து யோங் கிராமத்திலும், கலை அரங்கேற்ற குழு நிறுவப்பட்டுள்ளது. பயணிகளுக்கு தன் இனத்தின் பழக்க வழக்கங்களை இக்குழு செய்து காட்டுகின்றது. து யோங் இனத்தின் தனிச்சிறப்பியல்பு உடைய நடையுடை பாவனை, மென்மேலும் அதிகமான பயணிகளை ஈர்த்துள்ளது. நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து இங்கு வருகை தரும் பயணிகள் நேரில் இந்நடவடிக்கைகளில் பங்கெடுக்கும் அதே வேளையில், படமும் பிடித்துள்ளனர். 1 2 3
|