• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-14 16:28:03    
வெய் இன பாடகர் சு ர் துங்

cri

"வாங் ர்" என்பது, தனிச்சிறப்பு மிக்க நாட்டுப்புறப்பாடல் வடிவமாகும். வட மேற்கு சீனாவின் வெய் இனத்தவர்களிடையே இது பரவலாக காணப்படுகிறது. இதன் ராகம் கேட்பதற்கு இனிமையானது. பாடல் வரிகள் எளிமையானவை, தெளிவானவை. தெள்ளத்தெளிவான தேசிய இனத் தனித்தன்மையும், உள்ளூர் தனிச்சிறப்பும் உடையவை. கடந்த சில ஆண்டுகளில், வெய் இனப்பாடகர் சு ர் துங், "வாங் ர்"யின் அம்சத்தையும் எளிதான வடிவத்தையும் ஒன்றிணைத்து, இக்கலை வடிவத்தை, மக்களின் வரவேற்புக்குள்ளாக்கியுள்ளார். இப்போது, வெய் இனத்தவர்களின் திருமண விழா மற்றும் விருந்துகளில், அவரது பாட்டொலி கேட்பது வழக்கமாகி விட்டது. இன்று சு ர் துங் பற்றி அறிமுகப்படுத்துகின்றோம்.

சு ர் துங், வட மேற்கு சீனாவின் சிங்கியாங் விகுர் தன்னாட்சிப் பிரதேசத்தின் ஒரு ஆசிரியர். ஓய்வு நேரத்தில் அவரது விருப்பமானது, பாடலை இயற்றி பாடுவதாகும். கடந்த பத்து ஆண்டுகளில், "வெய் இனத்தவர்" "மாதுளம் பூ" உள்ளிட்ட 5 தொகுதிகளை அவர் வெளியிட்டிருக்கின்றார். இவற்றில் 120க்கும் மேலான பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

குழந்தைக் காலத்திலிருந்தே சு ர் துங் பாடவிரும்பினார். பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டதாரியான பின், இசை இயற்றுவதில் ஈடுபடத்துவங்கினார். அப்போது அவர் இயற்றியவை, பெரும்பாலும், கஜக்ஸ்தான் மற்றும் விகுர் இன பாடல்கள். பின்னர் நிகழ்ந்த ஒரு சக மாணவர்கள் சந்திப்பு மூலம் அவர் வெய் இன பாடலை இயற்றத்துவங்கினார். சு ர் துங் இது பற்றி நினைவு கூர்ந்து கூறியதாவது:

"அந்த சந்திப்பில், விகுர் இன மற்றும் கஜக்ஸ்தான் பாடல்களை நீங்கள் இவ்வளவு நன்றாகப் பாடுகின்றீர்கள். உங்களுடைய வெய் இனப்பாடலை ஏன் பாடக்கூடாது?என்று நண்பர் ஒருவர் விளையாட்டாகக் கூறினார். வெய் இனத்துக்கு பாடல் இல்லையே என்று மற்றொருவர் கூறினார். இவ்வார்த்தை, எனக்குத் தூண்டுதலாக அமைந்தது. இதை மறுத்து பேசுகையில், வெய் இனத்துக்கு பாடல் இல்லை எனக்கூற முடியாது. எங்களுடைய வாங் ர் என்பது, ஒரு பாடலாகும் என்றேன். நவீன வெய் இனப்பாடல் தங்களுக்கு இல்லை, பாரம்பரிய வாங் ர், எங்களுக்கு புரியாது. கேட்டு மகிழவே முடியாது" என்றும் அந்நண்பர் கூறினார்.

1  2  3