
சு ர் துங் இசை மீது பிரியம் கொண்டுள்ளார். ஆனால், அவரது இசைப் பாதையில் இன்னல்கள் நிறைய உள்ளன. சொந்தச் செலவில் முதலாவது பாடல் ஒலிநாடாவை வெளியிட்ட போது, பணம் குறைவு காரணமாக அவர், தம் மனைவி மற்றும் மகனுடன் சேர்ந்து நாடாவை சிப்பம்கட்ட வேண்டி ஏற்பட்டது. துவக்கத்தில் விளம்பரம் செய்வதற்குப் பணமில்லாததினால், ஒலிநாடாவை நன்கு விற்பனையாக வில்லை. இந்நிலையில், சு ர் துங் சொந்தமாக விளம்பரம் செய்யத் துவங்கினார். சென்ற இடமெங்கும் அவர் பாடினார். துவக்க நிலைப் பள்ளி நகரவாசிகளின் சதுக்கம், வயல் வெளி எங்கும் பாடினார். சென்ற இடம் எங்கும் அவர் உணர்ச்சிவசபட்டு பாடினார். படிப்படியாக சு ர் துங்கை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். அவரது நெருங்கிய நண்பர் பாங் யு சன் செய்தியாளரிடம் கூறியதாவது:
"நானும் அவருடன் கிராமப்புறத்துக்குச் சென்றே. அங்குள்ள நிலைமை என்னை மன முருகச் செய்தது. இத்தகைய உணர்வு இதற்கு முன்கண்டிராதது. வெய் இன பள்ளிக்குத் திரும்பிய பின், அங்குள்ள மாணவர்கள் சு ர் துங்கைச் சூழ்ந்து கொண்டு, கையெழுத்துப் போட்டுத் தருமாறு கேட்டனர். சு ர் துங் பாடும் போது, பல மாணவர்கள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. இப்போது வெய் இனத்தவர்கள் மட்டுமல்ல, சிங்கியாங்கிலுள்ள இதர பல தேசிய இனங்கள், எடுத்துக்காட்டாக, விகுர் இனம் மற்றும் கஜக்ஸ்தான் இனம் அவரை மிகவும் நேசிக்கின்றன" என்றார்.

பொது மக்களின் இதயப்பூர்வமான நேசிப்பு, சு ர் துங்கின் படைப்பு உற்சாகத்தை மேலும் தூண்டி விட்டது. அவர் சொந்த செலவில் "வெய் இனத்தவர்" "வெய் இன மங்கையர்" உள்ளிட்ட VCDஐ தயாரித்து வெளியிட்டார். "பிள்ளைகள் பள்ளிக்குப் போகின்றனர்" என்ற பாடல், புதிய தலைமுறை வெய் இனத்தவர்கள் அறிவை விரும்பி, கற்றுக்கொள்ளும் தோற்றத்தைக் காட்டுகின்றது. அவரது பாட்டொலி, வட மேற்கு சீனாவில் பரவுகின்றது. இது மட்டுமின்றி, வெய் இன மக்கள் வசிக்கும் இதர பல பிரதேசங்களிலும் பரவியுள்ளது.
பெய்சிங்கிலுள்ள வெய் இனத்தவரான மா செ ரி பேசுகையில், தாம் சு ர் துங்கின் பாடலை கேட்க விரும்புவதாகவும், அவரது பத்து வயதுடைய மகனும் விரும்பி கேட்பதாகவும் சொன்னார். ஏனெனில், சு ர் துங்கின் பாட்டொலி, கேட்பதற்கு மிகவும் இனிமையானது மட்டுமல்ல, அறிவுறுத்தலும் அடங்கும் என்றார்.
புகழ் பெற்ற பின்னரும் சு ர் துங் மக்களிடையே பாடுகின்றார். மக்கள், மக்களின் மண், மக்களின் வேர், அன்றி, தமது படைப்புகளுக்கான ஊற்றுமூலம் எனறார், அவர். தமது பாடல்கள் மூலம், பொது மக்களின் வாழ்க்கையை வளமாக்கவும், இப்பாட்டொலியிலிருந்து வெய் இனம் மற்றும் அதன் பண்பாடு பற்றி மக்கள் அறிந்து கொள்ளச் செய்திடவும் விரும்புவதாக சு ர் துங் கூறினார். 1 2 3
|