
அப்போது, சு ர் துங் இதை ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், நினைத்து நினைத்து நண்பரின் வார்த்தையில் நியாயம் இருப்பதை உணர்ந்து கொண்டார். ஏனெனில், மக்கள் அறிந்த வெய் இனப்பாடல், பொதுவாக வாங் ர் மட்டுமே.
எனவே, எவ்வாறு வெய் இனப்பாடலை மக்களிடையே பரவச் செய்வது என்று சு ர் துங் சிந்திக்கத் துவங்கினார். அவர் கூறியதாவது:
"இதர தேசிய இனங்களின் இசை வளர்ந்து வருகின்றது. மேலை நாடுகளின் இசை, முன்னேறிய பண்பாடு ஆகியவற்றை இவ்வினங்கள் தத்துமது பண்பாட்டில் சேர்த்து பின்னர் வெளிக்கொணர்ந்துள்ளன. வெய் இனத்துக்கும் சொந்த நவீன பாப் பாடல் இருக்க வேண்டும். பிறர் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய முறையில் தமது தேசிய இனத்தின் பண்பாடு, நற்குணம் ஆகியவற்றை அனைவருக்கும் அறிமுகப்படுத்த வேண்டும்" என்று தீர்மானித்தார்.

இவ்வாறு, வெய் இனப் பண்பாட்டையும் வரலாற்றையும் சு ர் துங் ஆராயத் துவங்கினார். சீன வரலாற்றில் தலைசிறந்த பலர், குறிப்பாக பண்டைய கடல் பயண வல்லுநர் செங் ஹங், எழுத்தாளர் ப் சுங் லின் முதலியோர், வெய் இனத்தவர்களே என்பதை அவர் கண்டு அறிந்தார்.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அவர்கள் பிரபலமானவர்கள். இருப்பினும் எந்த தேசிய இனங்களைச் சேர்ந்தவர்கள் என்று கேட்டால், சரியான பதிலளிக்கக்கூடியவர்கள் மிக சிலரே. இசைக் கலைஞர் என்ற முறையில், ஒரு பாடல் மூலம் அனைவருக்கும் வெய் இனத்தை அறிமுகப்படுத்த முடியுமா என்று சு ர் துங் நினைத்தார். இதற்காக, அவர் "வெய் இனத்தவர்" என்ற பாடலை இயற்றினார். சு ர் துங்கின் நண்பர் பாங் யு சன் பேசுகையில், சு ர் துங்கின் இப்பாடலை தாம் மிகவும் விரும்புவதாக கூறினார்.
"வெய் இன மக்கள் விரும்பும் மற்றும் அறிந்து கொள்ள ஆவல் கொள்ளும் கருத்துக்களை சு ர் துங் தமது பாடல்கள் மூலம் வெளிக்கொணர்கின்றார். அவரது இசை மூலம் வெய் இனத்தின் வரலாற்றுப் பண்பாட்டை நானும் அதிகமாகப் பரிந்து கொண்டேன்" என்றார்.
1 2 3
|