 சீனாவின் வெளிநாட்டுத் திறப்பு பணி விரிவாகி வருவதுடன், மேலும் அதிகமான வெளிநாட்டவர்கள் வேலைக்காகவும் படிப்புக்காகவும் சீனாவுக்கு வந்து வருகின்றனர். எண்ணற்ற வெளிநாட்டவர்கள் சீனாவில் சுற்று பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது. சீனாவில் வேலை செய்து, வாழ்க்கை நடத்தும் காலத்திலும், குறுகிய காலம் சீனாவில் தங்கியிருக்கும் நாட்களிலும் கூட, அவர்கள் சாதாரண சீன மக்களுடன், குறிப்பாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுடன் நேரடித் தொடர்பு கொள்கிறார்கள்.
 
கடந்த நூற்றாண்டின் 30ஆம் ஆண்டுகளில் அமெரிக்க செய்தியாளர் ஸ்னோ வட மேற்கு சீனாவின் யென் ஆன்னில் முதல்முறையாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களைச் சந்தித்தார். சீனத் தேசத்தின் சாரம் அவர்களிடம் இருப்பதை அவர் கண்டறிந்தார். அந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் அழியா உற்சாகமும், அசையா நம்பிக்கையும், வியத்தகு புரட்சி உணர்வும், கொழுந்து விட்டு எரியும் நெருப்பு போல அனைத்து இடர்களையும் அழிக்கின்றன. மனித ஆற்றல், இயற்கை, கடவுள், மரணம் ஆகியவற்றுக்கு முன் அவர்கள் ஒருபோதும் தோற்றதில்லை. "சீனாவில் சிவப்பு நட்சத்திரம்" என்ற தமது நூலில், தாம் சந்தித்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களைப் பற்றி அவர் இவ்வாறு மதிப்பிட்டுள்ளார்.
70 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று, பெய்ஜிங்கில் இணைய தள நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் அமெரிக்கர் பில், தற்போதைய சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்ளும் போது என்ன உணர்வு ஏற்பட்டது? என்பது பற்றிக் கூறுகிறார்—
"எங்கள் நிறுவனத்தில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இளம் பணியாளர்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் பல்கலைக்கழகப் படிப்பை அண்மையில்தான் முடித்தவர்கள். அவர்கள் தொழில் திறனும் அறிவுக் கூர்மையும் உடையவர்கள். அவர்களுடன் சேர்ந்து எங்கள் லட்சியத்தை வளர்ப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். இத்தகைய சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து வேலை செய்ய விரும்புகின்றேன்" என்றார் அவர்.
1 2 3
|