• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-12 08:53:28    
வெளிநாட்டவர்களின் பார்வையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள்

cri

43 வயதான பில், கடந்த 10 ஆண்டுகளாக சீனாவில் வேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகிறார். அமெரிக்காவில் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்த அவருக்கு, அவருடைய குடும்பத்தினருடன் அரசியல் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அவர் தமது கருத்தை விளக்கிக் கூறிய போது, விவாதமும் சண்டையும் ஏற்படுவதுண்டு. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி போல், மக்களின் உணவு, உறைவிடம் உள்ளிட்ட வாழ்க்கை வசதிகளுக்கு உத்தரவாதம் வழங்கக் கூடிய வேறு கட்சி எதுவும் அமெரிக்காவில் இல்லை. இது வியந்து பாராட்டத்தக்கது என்று அவர் கூறினார். யென் ஆன் நகருக்கு ஸ்னோ சென்ற போது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் மா சே துங் 43 வயதும், சோ ஏன் லாய் 37 வயதும் உடையவர்களாக இருந்தனர். அவர்கள் இருவரும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் தலைமுறை தலைமை பீடமாக இருந்து, நாட்டின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த இளைஞர்களை அணிதிரட்டினர். 10 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த கட்சி அற்புதத்தை படைத்து, நவ சீனாவை நிறுவியது. கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் ஆக்கப்பூர்வமான, உறுதியான எழுச்சி இன்று வரை தொடர்ந்து வருகிறது என்று பில் கூறினார்.

பெய்ஜிங்கில் செய்தி ஊடகம் ஒன்றில் வேலை செய்யும் பிரெஞ்சுப் பெண் ஹெலேன்னா, பில்லை விட 20 வயது இளையவர். கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் யார் என்று என்னிடம் சொல்ல வேண்டாம். நானே அவர்களை அடையாளம் காண முடியும். மற்றவருடன் நட்புப்பூர்வமாக பழகி, பொறுப்புணர்வோடு வேலை செய்கிறவர்கள் எல்லாருமே கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருப்பது நிச்சயம் என்று பெய்ஜிங்கில் ஓராண்டு மட்டுமே தங்கியிருந்த அவர் கூறினார். அவர் மேலும் கூறியதாவது—

"நான் அடிக்கடி இரவு வேலை செய்கின்றேன். என்னை விட வயது அதிகமான பெண் சக பணியாளர் என்னை கவனிக்கிறார். அவர் வேலையின் முழுப்பொறுப்பையும் ஏற்கிறார். என்னுடன் பேசும் போது, பெய்ஜிங்கில் வேலை செய்வதிலும் வாழ்க்கையிலும் என்ன பிரச்சினை இருக்கிறது என்று அன்போடு கேட்கிறார். மற்றவர்களையும் அவர் மிகவும் கவனிப்பதை நான் கண்டேன். பிறகுதான் அவர், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் என்று தெரிந்து கொண்டேன்" என்றார் அவர்.

ஹெலேன்னா போல் பல வெளிநாட்டவர்கள் ஒளிவு மறைவின்றி பேசுகின்றனர். அவர்கள் யாரையும் புகழ வேண்டாம். ஆனால், தங்களுடன் சேர்ந்து வேலை செய்து கற்று கொள்ளும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் பற்றி குறிப்பிடுகையில் அவர்கள் உளமார்ந்த பாராட்டைத் தெரிவிக்கின்றனர்.

1  2  3