• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-19 20:34:15    
மணல் காற்றைக் கட்டுப்படுத்துவதில் முன்னேற்றம்

cri

இவ்வாண்டு ஏப்ரல் திங்கள் 16ஆம் நாள் இரவில், சீனாவின் வட பகுதியில் மணல் காற்று வீசியது. அப்போதைய பார்வை தெளிவின் தூரம் 1000 மீட்டருக்குட்பட்டது. பெய்ஜிங் மாநகர் கடுமையாக பாதிக்கப்பட்ட இடங்களில் ஒன்றாகும். அடுத்த நாள் அதிகாலையில் தரை, மலர், புல் மற்றும் கார்களில் புழுதி படிந்தது. இந்த மணல் காற்று மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தியதோடு, சுற்றுச்சூழலையும் கடுமையாக மாசுபடுத்தியது. அந்த நாளில்தான், பெய்ஜிங் மக்கள் வானொலி நிலையம், பெய்ஜிங் பசுமையாக்க நிதியம், தோலுன் மாவட்ட அரசு ஆகியவை, தோலுனில் மணல் நிலத்தைக் கட்டுப்படுத்தி பெய்ஜிங் மாநகருக்கு நீல வானத்தைத் திரும்பி வழங்குவது என்ற திட்டப்பணியின் 6வது கட்டத்தை கூட்டாகத் துவக்கின. தோலுன் மாவட்டத்தின் சூழலைக் கட்டுப்படுத்தி, பெய்ஜிங்கைப் பாதுகாக்கும் பச்சை திரையாக மாறச் செய்வது இத்திட்டப்பணியின் நோக்கம். பெய்ஜிங்கின் பல்வேறு பெரிய செய்தி ஊடங்களின் செய்தியாளர்களும் தொண்டர்களும் இத்திட்டப்பணியின் துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

சீனாவின் உள்மங்கோலிய தன்னாட்சி பிரதேசத்தின் நடுப்பகுதியில் அமைந்துள்ள தோலுன் மாவட்டம் பெய்ஜிங் மாநகருக்கு மிக அருகில் உள்ளது. தோலுன் மாவட்டத்தில் மணல் காற்றைக் கட்டுப்படுத்துவதன் பயன், பெய்ஜிங்கின் சூழலுடன் நேரடி தொடர்பு உடையது.

கடந்த ஏப்ரல் 17ஆம் நாள் பெய்ஜிங்கில் நவ சீனா நிறுவப்பட்ட பிந்திய மிகப் பெரிய மணல் காற்று வீசியது. இந்த மணல் காற்று மங்கோலிய நாட்டில் உருவாகி, தோலுன் வழியாக பெய்ஜிங் மாநகருக்குள் நுழைந்தது.

1  2  3