
தோலுன் மாவட்டத்தில் மணல் காற்று கடுமையாகாமல் இருந்த போதிலும், அதன் மாற்றத்துக்கு தோலுன் முக்கிய பங்கு ஆற்றியது. ஹுன்சான்தாக் என்ற மணல் நிலத்தின் தென் விளிம்பில் தோலுன் அமைந்துள்ளது. வரலாற்றில் இது ஒரு அழகான இடமாகும். ஆனால், 2000ஆம் ஆண்டில் அப்போதைய தலைமை அமைச்சர் ச்சு ரொங்ச்சி அங்கு சோதனை பயணம் மேற்கொண்ட போது, அங்கே மஞ்சள் மணல் நிறைந்து காணப்பட்டது. புல் வளர முடியா நிலை இருந்தது. அப்போதைய நிலைமை பற்றி குறிப்பிடுகையில் இம்மாவட்டத்தின் தலைவர் யௌ துங் கூறியதாவது—
"2000ஆம் ஆண்டில் எங்கள் மாவட்டம் பாலைவனத்துக்குச் சமம். சொடர்ச்சியான வறட்சி மற்றும் அளவுக்கு மீறிய மேய்ச்சலால், மணல் நிலமாக மாறிவிட்டது" என்றார் அவர்.

ஆனால், 5 ஆண்டுகால முயற்சியுடன், மணல் காற்று கட்டுப்பாடு பெரும் பயன் தந்துள்ளது. தற்போது தோலுனில் செடி வளர்ச்சி விகிதம் 30 விழுக்காட்டிலிருந்து 70 விழுக்காட்டுக்கு மேலாக உயர்ந்துள்ளது. சில பகுதிகளில் இந்த விகிதம் 80 விழுக்காட்டை எட்டியுள்ளது. மாவட்ட தலைவர் யௌ துங் கூறியதாவது—
"மணல் காற்று கட்டுப்பாடு, 5 ஆண்டுகள் நடத்தப்பட்டுள்ளது. இவ்வாண்டு 6வது ஆண்டாகும். புல்வெளி பச்சையாகாமல், காற்று வீசிய போதிலும், மணல் காற்று வீசுவது மிகக் குறைவு என்பதை காணலாம்" என்றார் அவர்.
மணல் காற்றைக் கட்டுப்படுத்தும் போக்கில் தோலுன் மாவட்ட மக்கள் இரண்டு வழிகளை மேற்கொள்கின்றனர். ஒன்று, மழைக் காலம் வரும் போது விமானம் மூலம் புல் விதைகளை தூவுவது. இந்த வழி மூலம் புல்வெளியில் செடி வளர்ச்சி விரைவில் மீட்கப்படும். இரண்டு, தோலுன் மாவட்ட அரசு தலைவர்கள் ஆயர்களை அழைத்து கொண்டு உள்ளூரின் சிறப்பான காலநிலைக்கிணங்க மரங்களை நடுகிறார்கள். Poplar மரமும் willow மரமும் வறட்சிக்கும் குளிருக்கும் தாக்கு பிடிக்க முடியும் என்பதால், அவை அரை வறட்சியான பீடபூமி காலநிலையைக் கொண்டிருக்கும் தோலுன் புல்வெளியில் வளரலாம்.
1 2 3
|