• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-19 20:34:15    
மணல் காற்றைக் கட்டுப்படுத்துவதில் முன்னேற்றம்

cri

தோலுன் மாவட்டத்தின் துணைத் தலைவர் பான் சுன் லேய் கூறியதாவது—

"இப்போது நாம் கண்ட மணல் குன்றில் வளரும் தாவரங்களில் பெரும்பாலும் புற்களே காணப்படுகின்றன. இந்த புல் இயல்பாக வளர்கிறது. குகைகளில் வளர்ந்த மரங்கள் செயற்கையாக நடப்பட்டன" என்றார் அவர்.

அன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீன வானொலி நிலையத்தின் செய்தியாளர் ஒருவர் கூறியதாவது—

"தோலுனில் மணல் நிலத்தைக் கட்டுப்படுத்தி பெய்ஜிங் மாநகருக்கு நீல வானத்தைத் திரும்பி வழங்குவது என்ற திட்டப்பணியின் 6வது கட்ட பணியில் கலந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். எங்கள் வருகை மூலம் தோலுன் மாவட்டத்தின் மணல் காற்றைக் கட்டுப்படுத்தும் திட்டப்பணிக்கு பங்காற்றினால், மணல் காற்றில் இருப்பது எங்களுக்கு கஷ்டமில்லை. அடுத்த ஆண்டில் இங்கு வந்து, நாங்கள் நட்ட மரங்கள் சீராக வளர்வதைக் காண முடியும் என்று விரும்புகின்றோம்" என்றார் அவர்.

மணல் காற்றைக் கட்டுப்படுத்தும் போக்கில், முன்பு விளை நிலமாக இருந்த வனப் பிரதேசத்தில் மரம் நடுவது, மேய்ச்சல் நிலமாக இருந்த புல்வெளியில் புல் நடுவது ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆயர்கள் அங்கிருந்து வெளியேறியதால், அவர்களுக்கு முன்பிருந்த வருமானம் இழந்து, பேரிழப்பு ஏற்பட்டது. ஆயர்களின் வாழ்க்கை தரம் தாழ்ந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முன்பிருந்த நிலத்தில் வெளியேறிய ஆயர்களுக்கு அரசு உதவி தொகையை வழங்குவது, ஆயர்களின் தொழில் நடத்தும் முறையை மாற்றி, அவர்களை நகரவாசிகளாக ஆக்குவது, வெளியூர்களில் வேலை பார்க்க அவர்களுக்கு தொழில் பயிற்சி அளிப்பது ஆகியவை இந்த நடவடிக்கைகளில் அடங்கும். இதனால், ஆயர்களின் வாழ்க்கை தரத்தைப் பாதிக்காமல் இருக்கும் அதே வேளையில், மாவட்ட அரசின் மணல் காற்று கட்டுப்பாடு செவ்வனே நிறைவேற்றப்பட முடியும்.

இன்றைய தோலுன் 5 ஆண்டுகளுக்கு முந்தைய தோலுனுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது மிகவும் வித்தியாசமானது. 5 ஆண்டுகள் நீடித்த மணல் காற்று கட்டுப்பாட்டில், தனது வளர்ச்சிக்கு ஏற்ற வழிமுறையை தோலுன் மாவட்ட மக்கள் கண்டறிந்துள்ளனர். அதாவது, இயற்கை உயிரின வாழ்க்கையை மீட்கும் அதே வேளையில், மக்களின் வாழ்க்கை தரத்தை படிப்படியாக உயர்த்த வேண்டும். இந்த பாதையில் தொடர்ந்து நடைபோட்டால், தோலுன் மாவட்டத்தில் பச்சை மலையும் தூய்மையான ஆறும் மீண்டும் காணப்படுவது உறுதி. இந்த மாவட்டம் மீண்டும் அழகான தாயகமாக மாறிவிடும்.


1  2  3