• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-21 17:49:43    
சிறுபான்மை தேசிய இனங்களின் வளர்ச்சிக்கு உதவி

cri

நூ இன நங்கை

சீனா, பல தேசிய இனங்களைக் கொண்ட ஒரு நாடு. ஹாங் இனம் தவிர, இன்னும் 55 சிறுபான்மை தேசிய இனங்கள் சீனாவில் இருக்கின்றன. அவற்றில், 22 இனங்களின் மக்கள் தொகை, ஒரு லட்சத்துக்குட்பட்டது. எனவே, அவை, சிறுபான்மை தேசிய இனங்கள் என அழைக்கப்படுகின்றன. இவ்வினங்கள் பெரும்பாலும் ஒதுக்குப்புறப் பிரதேசத்தில் வாழ்கின்றன. அவற்றின் ஒட்டுமொத்த வளர்ச்சி நிலை, ஒப்பீட்டளவில் பின்தங்கியதாகவுள்ளது. இவ்வினங்களின் வளர்ச்சி நிலையை மேம்படுத்தும் வகையில், கடந்த நூற்றாண்டின் இறுதி முதல், இவ்வினங்களின் வளர்ச்சிக்கு ஆதரவாக, சீனா, தொடர்ந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

குறைந்த மக்கள் தொகையுடைய இந்த சிறுபான்மை தேசிய இனங்களின் தற்போதைய நிலைமையை அறிந்து கொள்ள, எமது செய்தியாளர், தென்மேற்கு சீனா, வட கிழக்கு சீனா உள்ளிட்ட இத்தகைய தேசிய இனங்கள் கூடிவாழும் பிரதேசங்களுக்கு சென்றுள்ளார்.

நூ இன இளைஞர்

நூ இன மக்கள் தென் மேற்கு சீனாவின் யுன்னான் மாநிலத்தில் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் தலைநகர் குவென் மிங்கிலிருந்து புறப்பட்டு, எமது செய்தியாளர் ஜியா சாங் கிராமம் என்னும் ஒரு நூ இன கிராமத்தை சென்றடைந்தார். பனி மூடிய மலைகளின் அரவணைப்பிலுள்ள இக்கிராமத்தில், சீரான பாதைகள் உள்ளன. பாதையோரத்தில் புதிதாகக் கட்டப்பட்ட செங்கல் வீடுகள் வரிசையாக காணப்படுகின்றன.

இந்த கிராமத்தைச் சேர்ந்த லியு யாங் ஹே என்பவரின் வீட்டில் நுழைந்த எமது செய்தியாளர், அகலமான வெளிச்சம் நிறைந்த வரவேற்பு அறையில், தொலைக் காட்சிப் பெட்டி, குளிர்ப்பதனப்பெட்டி, சலவை இயந்திரம் முதலியவை இருப்பதை கண்டார். 2000ம் ஆண்டு முதல், கிராமத்தில் சுற்றுலா ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட துவங்கிய பின், கிராமவாசிகளின் வருமானம் அதிக அளவில் கூடியுள்ளது. எனவே அனைவரும் புதிய வீடுகளைக் கட்டியுள்ளனர். வீட்டுப்பயன்பாட்டு மின்னணு கருவிகளை வாங்கினார்கள் என்று லியு யாங் ஹே செய்தியாளரிடம் தெரிவித்து மகிழ்ந்தார். ஆனால், 5, 6 ஆண்டுகளுக்கு முன்பு, மலைப்பாதைகள் அதிகம், விளை நிலம் குறைவு என்ற காரணத்தால், நூ இனத்தவர்களின் வாழ்க்கை நிலை தற்போதைய நிலையிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது என்று அவர் சொன்னார்.

1  2  3