• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-21 17:49:43    
சிறுபான்மை தேசிய இனங்களின் வளர்ச்சிக்கு உதவி

cri

பு மி இன மகளிர்

"சுற்றுலாத்துறை வளர்ச்சியடைவதற்கு முன், பயிரிடும் தொழில் தவிர, கோழிகளை விற்பது, வேளாண் துறைத் தொழில் செய்வது ஆகியவை மூலம் வருமானம் பெற முடிந்தது. வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்தது" என்றார்.

வருமானம் குறைவு என்பது, சீனாவில் சிறுபான்மை தேசிய இனங்களில் முன்பு பொதுவாக காணப்பட நிலையாகும். இது போக, அப்போது இவ்வினங்கள், இதர சில பிரச்சினைகளை எதிர்நோக்கின. எடுத்துக்காட்டாக, பின்தங்கிய அடிப்படை வசதிகள். சிறுபான்மை தேசிய இனங்கள் கூடிவாழும் கிராமங்களில், மின்சாரம், நெடுஞ்சாலை, துவக்கப்பள்ளி, சுகாதார பகுதி, பாதுகாப்பான குடிநீர் ஆகிய வசதிகள் இல்லை. நான்கில் ஒரு பகுதியினரின் உணவு-உறைவிட பிரச்சினை நீங்கவில்லை.

பு மி இன மகளிர்

இத்தகைய நிலை இல்லாமல் போக்கும் வகையில், கடந்த நூற்றாண்டின் இறுதி முதல், சிறுபான்மை தேசிய இனங்களின் வளர்ச்சிக்கு உதவியாக சீனா தொடர்ச்சியான நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, 2002 முதல் 2004 வரை, அங்குள்ள குடிநீர், மின்வசதி, நெடுஞ்சாலை முதலிய அடிப்படை வசதிகளை மேம்படுத்த, அரசு பத்து கோடி யுவானை முதலீடு செய்துள்ளது. அவர்களின் வருமானத்தை அதிகரிக்க, தொழில் கட்டமைப்பைச் சரிப்படுத்துவதிலும், தனித்தன்மை வாய்ந்த மேம்பாடான தொழில்களை வளர்ச்சியுறச்செய்வதிலும், தொடர்புடைய பகுதிகள் உதவியளித்துள்ளன. அறிவியல் தொழில் நுட்பம், கல்வி, சுகாதாரம், பண்பாடு முதலிய சமூக துறைகளை வளர்ப்பதிலும் இவ்வின மக்களுக்கு உதவி கிடைத்துள்ளது.

உதவிகளை மேலும் விரிவாக்கும் வகையில், கடந்த ஆண்டு, "சிறுபான்மை தேசிய இனங்களுக்கு உதவும் திட்டத்தை" சீனா வெளியிட்டுள்ளது. இது பற்றி சீன தேசிய இன விவகாரக் கமிட்டியின் பொருளாதாரப் பகுதியின் துணை தலைவர் சுட்டிக்காட்டியதாவது:

"ஐந்தாண்டுகாலத்தில் சிறுபான்மை தேசிய இனங்களின் உணவு உறைவிடப் பிரச்சினையை தீர்த்து, அவற்றின் பொருளாதார சமூக வளர்ச்சி நிலையை, இடைநிலை அல்லது அதற்கு மேலான நிலைக்குக் கொண்டு வருவது, இத்திட்டத்தின் குறிக்கோளாகும்" என்றார்.

இக்குறிக்கோளை நனவாக்க, வரும் ஐந்தாண்டுகளில், சீனாவின் பல்வேறு நிலை அரசுகள், நூறு கோடி யுவானை முதலீடு செய்யவுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளில் அரசின் உதவியுடன், சிறுபான்மை தேசிய இனங்கள் வாழும் பிரதேசங்களின் வளர்ச்சி நிலையில் மாபெரும் மாற்றம் காணப்பட்டுள்ளது. பு மி இனம், யுன்னான் மாநிலத்தின் வடமேற்கு பகுதியில் வாழும் இத்தகைய இனங்களில் ஒன்றாகும். இவ்வினத்தவர்கள் கூடிவாழும் காங் சு ஹங் கிராமத்தில், வேறு பகுதிகளுக்கு செல்லும் நெடுஞ்சாலை கட்டிமுடிக்கப்பட்டது. உள்ளூர் அரசின் நிதியுதவியுடன், கிராமவாசிகள் மாடு வளர்ப்புத்தொழில் செய்கின்றனர். உள்ளூர் தேசிய இன விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரியான ஹெ சியு ச்சாங் அம்மையார் பேசுகையில், அரசு, ஒவ்வொரு பு மி குடும்பத்துக்கும் இலவசமாக இரண்டு மாடுகளை தந்துள்ளது. மாடு வளர்ப்புத்தொழில் மூலம் வருமானத்தைக் கூடுதலாகப் பெறச்செய்வது அதன் நோக்கம் என்றார்.

1  2  3