• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-21 17:49:43    
சிறுபான்மை தேசிய இனங்களின் வளர்ச்சிக்கு உதவி

cri

ஹாச்சே இனத்தவர்

பு மி இன மக்கள், முன்பு, இந்த தொழிலை செய்ததில்லை. எனவே, உள்ளூர் தொடர்புடைய பகுதியின் ஏற்பாட்டில், பு மிங் இனக் கிராமங்களில் மாடு வளர்ப்புக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. மாட்டு நோயைத் தடுப்பு மாடு வளர்ப்பு முதலியவை பயிற்சியின் அம்சங்களாகும். இந்நடவடிக்கைகள், பு மி இன மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன. இது மட்டுமின்றி, வளர்ப்புத்தொழிலின் விறுவிறுப்பான வளர்ச்சியையும் முன்னேற்றியுள்ளன.

பு மி இனம் போலவே, இப்போது சிறுபான்மை தேசிய இனங்களின் உற்பத்தி மற்றும் வாழ்க்கை நிலை, முன்பை விட மேம்பட்டுள்ளது. வட கிழக்கு சீனாவின் ஹங்லுங்கியாங் மாநிலத்தில் வாழும் ஹாச்சே இனத்தின் பல்வேறு கிராமங்களில் மின் வசதி, நெடுஞ்சாலை, குடிநீர் வசதிகள் உள்ளன. சிலவற்றில் செல்லிடப் பேசிகள் பயன்படுத்தப்படுகின்றன. அரசின் ஊக்கம் ஆதரவு ஆகியவற்றின் கீழ், இவ்வினம், சுற்றுலாத்துறையை வளர்ப்பதன் மூலம், வளமடைந்து வறுமையிலிருந்து விடுபட்டது.

சீன தேசிய இன விவகாரக்கமிட்டியின் அதிகாரி ஒருவர் பேசுகையில், இனிமேல், சிறுபான்மை தேசிய இனங்களுக்கான உதவியை அரசு தொடர்ந்து வலுப்படுத்தும் என்றார்.


1  2  3