• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-26 12:17:55    
ஒரு குடும்பத்தில் மூன்று தலைமுறை கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள்

cri

ஒரு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக ஆவது, சீன மக்கள் பலர் ஆவலுடன் எதிர்பார்க்கும் லட்சிய குறிக்கோளாகும். இப்படிப்பட்ட பொது குறிக்கோளைப் பார்க்கும் போது, ஒரு குடும்பத்தில் மூன்று தலைமுறையினர் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களாக இருக்கும் நிலைமை சீனாவில் அரிய நிகழ்ச்சி அல்ல. தென் மேற்கு சீனாவின் யுன்னான் மாநிலத்தின் ஒரு சாதாரண குடும்பத்தில், மூன்று தலைமுறையினர் கட்சி உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

30 வயதான Lu Gang நாள்தோறும் அதிகாலையில், யுன்னான் மாநிலத்தின் Kun Ming நகரில் உள்ள ஒரு வங்கிக்கு சென்று, வேலை செய்கின்றார். இந்த இளைஞர் உறுதியானவர் என்று சக பணியாளர்கள் கூறுகின்றனர். வங்கியில் கடினமாக உழைத்த பிறகு, நாள்தோறும், அலுவலகத்தை அவர் சுத்தம் செய்து, வீட்டுக்கு திரும்புகிறார். இந்த இளைஞர், 12 ஆண்டுகளுக்கு முன், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்.

இடைநிலை பள்ளியில் கல்வி பயின்ற போது, தாம் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர விரும்புவதாகவும், தனது மனதில் கம்யூனிஸ்ட் கட்சியின் தகுநிலை உன்னதமானது என்றும் Lu Gang கூறினார்.

இடைநிலை பள்ளிப் படிப்பை முடித்த பின், Lu Gang படையில் சேர்ந்தார். அப்போது, கம்யூனிஸ்ட் கட்சியில் சேர வேண்டும் என்ற நம்பிக்கையினால், அவர் சுறுசுறுப்பாக பணி புரிந்தார். படையில் அவர் கடுமையான பயிற்சி எடுத்தது மட்டுமல்ல, இன்னல்மிக்க கடமைகளையும் முன்வந்து ஏற்றார். இறுதியில், கட்சி அமைப்பின் சோதனையில் Lu Gang வெற்றி பெற்று, கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக மாறினார்.

சிறு வயதிலேயே தாம் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர விரும்புவதாக Lu Gang கூறினார். ஏனெனில், சிறந்த கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களால் அவர் ஈர்க்கப்படுகின்றார். தவிர, குடும்பமும் ஒரு முக்கிய காரணியாகும். ஏனெனில், அவரின் தாத்தாவும் தந்தையும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஆவர்.

1  2  3