• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-26 12:17:55    
ஒரு குடும்பத்தில் மூன்று தலைமுறை கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள்

cri

Lu Gangவின் தாத்தா Lu Yin Sheng தமது இளம் வயதில், ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போரில் கலந்து கொண்டு, இப்போரின் வெற்றியையும், நவ சீனா நிறுவப்பட்டதையும் நேரில் கண்டார். ஜப்பான் சீனாவை ஆக்கிரமித்த போது, Lu Yin Sheng கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். ஜப்பானிய ஆக்கிரமிப்பாளர் சீனர் பலரைக் கொன்றததை அவர் நேரில் கண்டார். இதனால், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் அவர் சேர்ந்து, அன்னிய ஆக்கிரமிப்பாளருக்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுத்தார்.

போர் நடைபெற்ற போது, Lu Yin Sheng சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். நவ சீனாவின் கட்டுமானத்தில் அவரின் மகன் Lu Jian Guo கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். கம்யூனிஸ்ட் கட்சியின் மீது அப்பா கொண்டுள்ள அன்பு தனக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று சிறு வயதிலேயே ராணுவ முகாமில் வளர்ந்து வந்த Lu Jian Guo தெரிவித்தார்.

ராணுவ முகாமில் இருந்த போதே Lu Jian Guo கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். அமைதியான கால கட்டத்தில், ராணுவ முகாமில், பயிற்சி எடுப்பதோடு, காய்கறிகளை பயிரிட்டு, துப்புரவு செய்ய வேண்டும். அப்போது பணிகளை மேற்கொள்வதில் Lu Jian Guo எப்பொழுதும் முன்னணியில் இருந்தார்.

சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி நடைமுறைக்கு வந்த பின், Lu Jian Guo அரசுப் பணியாளராக மாறி, யுன்னான் மாநிலத்தின் தொழிலாளர் அலுவலகத்தில் சேர்ந்தார். துவக்கத்தில், புதிய பணிகளின் தேவைக்கு இணங்க, அவர் விரும்பிச் செயல்பட்டு வந்தார்.

தற்போது, தமது தந்தையைப் போல், Lu Jian Guo பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். ஒவ்வொரு வார இறுதியிலும், Lu Gang அவர்களை சந்தித்தார். தந்தையும் தாத்தாவும் வயது முதிர்ந்த நிலையிலும், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் என்ற முறையில் அவர்களின் செயல்கள், தமது மனதில் ஆழப்பதிந்துள்ளன என்று Lu Gang தெரிவித்தார். குழந்தைப் பருவத்தில், தமது தாத்தாவை புகழ் பெற்ற ராணுவ அதிகாரியாகக் கண்டார். சிறப்பு காரை பயன்படுத்தும் சலுகையை அவர் பயன்படுத்த முடியும். ஆனால், மற்ற படைவீரர்களை போல், வேலை செய்து, கூட்டத்தில் கலந்து கொள்ள, அவர் நடந்தே சென்றார். பணியிலிருந்து ஓய்வு எடுப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன், தனது தந்தை பின்தங்கிய பகுதிக்குச் சென்று வேலை செய்ய வேண்டும் என்று விரும்பி முடிவெடுத்தார்.

1  2  3