அப்போது Lu Gang, தாத்தா மற்றும் தந்தையின் செயல்களை புரிந்து கொள்ளவில்லை. தாம் வளர்ந்த பின், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் என்ற வரையறையின் படி, அவர்கள் செயல்பட்டனர் என்று Lu Gang புரிந்து கொண்டார். கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக மாறிய போது, தாத்தா மற்றும் தந்தையை அவர் அறிந்து கொண்டார்.
"வேலை செய்யும் போது, ஒரு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் என்பதை மனதில் கொண்டு, எதையும் செய்தாலும், மற்றவரை விட சிறப்பாக இருக்க வேண்டும் என நான் விரும்புகின்றேன்" என்றார் அவர்.
நேரம், இடம், பதவி ஆகியவற்றின் மாற்றத்துடன், கம்யூனிஸ்ம் communism மீதான குடும்பத்தினர்களின் எதிர்பார்ப்பு மாற போவதில்லை என்று Lu Gang தெரிவித்தார். தலைசிறந்த பணியாளராக மாற தாம் தொடர்ந்து பாடுபடுவதாக அவர் கூறினார். தனது தந்தை ஓய்வு பெற்ற போதிலும், முன்னாள் பிரிவில் தொடர்ந்து பணி புரிகின்றார் என்று தந்தை பற்றி அவர் குறிப்பிட்டார்.
தந்தை Lu Jian Guoக்கு ஒரு சிறிய விருப்பம் உண்டு.
"எனக்கு இரண்டு மகன்கள் உண்டு. Lu Gang எனது முதலாவது மகன். அண்மையில், கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்வது பற்றி சிந்திக்குமாறு எனது இரண்டாவது மகனிடம் கூறினேன். நிறுவனத்தில் இக்கோரிக்கை இல்லை என்று அவர் கூறினார். கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தால் தான், நீங்கள் செவ்வனே பயிற்சி பெறலாம் என்று கூறினேன்." என்றார் Lu Jian Guo.
காலம் விரைந்தோடி, Lu Gangவின் குடும்பத்தில் மூன்று தலைமுறையினர் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர். கம்யூனிஸ்ம் communism மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து நிலவுகின்றது. 1 2 3
|