• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-28 08:47:54    
உஸ்பெக் இன பாடகர் சமிலி சக்ர்

cri

வட மேற்கு சீனாவின் சிங்கியாங் விகுர் தன்னாட்சிப் பிரதேசம், பல தேசிய இனங்கள் கூடிவாழும் வட்டாரமாகும். இவ்வினத்தவர்கள் ஆடல் பாடலில் தேர்ச்சி பெற்றவர்கள். உஸ்பெக் இனத்தில் தலைசிறந்த பாடகர்கள் பலர் அங்கு காணப்படுகின்றனர். அவர்களில் ஒருவரான உச்ச குரல் இசை பாடகர் சமிலி சக்ர் பற்றி அறிமுகப்படுத்துகின்றோம். இனிமையாகப் பாடுவது தவிர, நற்பணிகளிலும் அவர் உற்சாகமாக பங்கெடுத்துள்ளார். எனவே, அவர், மக்களின் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய கலைஞர், பொது நலன் தூதர் என்று போற்றப்படுகிறார்.

சமிலி, 1958ம் ஆண்டு சிங்கியாங்கின் Qi Tai மாவட்டத்தில் உள்ள ஒரு குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை, உஸ்பெக் இனத்தவர். தாய், விகுர் இனத்தவர் 6 பிள்ளைகளில் அவர் நான்காவது பிள்ளையாவார். ஆடல் பாடலில் தேர்ச்சியுடைய இக்குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர், குழந்தைப் பருவத்திலிருந்தே பாடவும் ஆடவும் விரும்பினார். 5 வயதான போது, மாவட்டத்தில் நடந்த கலை அரங்கேற்றத்தில் அவரை அவரது தந்தை அரங்கேறச் செய்தார். இசை ஒலியைக் கேட்டதுமே, அவர் ஆடிபாடி அடுத்தடுத்து மூன்று நிகழ்ச்சிகளை அரங்கேற்றினார்.

சமிலி வளர்ந்த பின், படையில் சேர்ந்து, எல்லைக் காவல் படைவீரராக மாறினார். படைலை நேசிக்கும் அவர், ஓய்வு நேர கலை ஆசிரியராக மாறினார். விடுமுறை நாட்களிலும் விழாக்களிலும், படைவீரர்களுடன் சேர்ந்து இசை இசைத்து பாடுவார். படை வாழ்க்கை, அவர் ராணுவ முகாம் பாடலை இயற்றும் பேர் ஆர்வத்தை தூண்டி விட்டது. பகலில் பயிற்சி மிகவும் மும்முரமானது, எனவே, இரவில் அவர் அயராது பாடல்களை இயற்றினார்.

1  2  3