• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-28 08:47:54    
உஸ்பெக் இன பாடகர் சமிலி சக்ர்

cri

இது வரை "நான் படைப்பிரிவிலுள்ள பாடகர்" "டாபங் நகரக்கதை" உள்ளிட்ட சுமார் 200 பாடல்களை இயற்றி பாடியுள்ளார். அவரது பாடல் தொகுதிகள் சீன ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன என்பது மட்டுமல்ல, ஜப்பான், சிங்கப்பூர் முதலிய நாடுகளின் ரசிகர்களாலும் வரவேற்கப்படுகின்றன.

சமிலி, தற்போது, சிங்கியாங் ராணுவ மண்டல ஆடல் பாடல் குழுவில் பணிபுரிகின்றார். அவர், அரசு நிலை முதல் வரிசை நடிகர். எல்லைக்காவல் படையை விட்டு சென்ற அவர், அடிக்கடி தமது சக போராளிகளை நினைத்துக்கொண்டே, அங்கு பாட செல்வது வழக்கம்.

"நான், எல்லைக்காவல் படைக்குச் சென்று பாடும் முதலாவது அரசு நிலை முதல் இலக்க நடிகர். ஏழாண்டுகளாக ஆண்டுதோறும் வசந்த விழா நாட்களில், நான் அங்கு சென்று பாடல் விழா நடத்துகின்றேன். பல்வேறு படைப்பிரிவுகளில் 100க்கும் அதிகமான பாடல் விழாக்களை நடத்தியிருப்பதாக" கூறினார்.

ஒரு ஆண்டின் வசந்த விழாவில் சமிலி, எல்லைக்காவல் படையினர்களுக்கு பாடச் செல்லும் வழியில், அவர் ஏறிய வாகனம் ஏதோ காரணத்தினால் மலையின் அரை உயரத்தில் நின்று விட, முன்னேற முடியாத நிலையில், சமிலி, தம் முதுகில் அக்கார்டியனைக் கட்டிக் கொண்டு மலையில் ஏறினார். காவல் நிலையம் சென்றடைந்ததும் சமிலி குளிரால் உடல் முழுவதும் நடுங்குவதை கண்ட ஒரு போராளி, தனது தோல் அங்கியைக் கொண்டு சமிலியின் விறைத்து போன கால்களை கட்டி, அவரை நெருக்கமாக கட்டியணைத்தார். போராளியின் செயலினால் மனமுருகிய சமிலி, கண்களிலிருந்து கண்ணீர் வடிந்து நிலா ஒளியில், குளிர் காற்றையும் பொருட்படுத்தாமல், போராளிகளுக்காக ஒரு மணி நேரத்திற்கும் மேல் பாடினார்.

1  2  3