
பாடல் தவிர, பொது நலப் பணிகளிலும் சமிலி ஆர்வம் கொண்டு, அடிக்கடி ஏழைக் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குவது வழக்கம். 2002ம் ஆண்டு, சிங்கியாங்கின் முதலாவது அறக்கொடைத் தூதராக சமிலி பாராட்டப்பட்டார். 2003ம் ஆண்டு சிங்கியாங்கின் காஷிங் நகரத்தில் 18 வயதான விகுர் இன பெண்மணி நமேங்குரி ரத்த சோகை நோய்வாய்பட்டார். வறுமையினால் சிகிச்சை பெறுவதற்குப் பணமில்லை. சமிலி இதை அறிந்த பின், மூவாயிரம் யுவானை நன்கொடை வழங்கினார். பின்னர், அரங்கேற்றத்தின் மூலம் பெற்ற பத்தாயிரம் யுவானை, நேரில் இப்பெண்மணியிடம் கொடுத்தார். சமிலி மற்றும் இதர ஆர்வமிக்கவர்களின் உதவியுடன் அவள் குணமடைந்தார்.
விகுர் இன யுவதி லு சிடன் யுலுஸ், சமிலி வழங்கிய நிதியுதவியுடன், அவருக்கு மாற்றுச் சிறு நீரகம் பொருத்தப்பட்டது. அவள் கூறியதாவது:
"சமிலி போன்ற அன்புமிக்கவர்கள் பலர் இருக்க வேண்டும் என விரும்புகின்றோம். குறிப்பாக, சமிலி ஓய்வு நேரத்தில் எங்களைப் பார்த்து ஊக்கமளித்தார். தார்மீக ரீதியில் எங்களுக்கு மிகப் பொரும் ஆதரவு அளித்தார். நான் மிகவும் மனமுருகினேன்" என்றார்.
சிங்கியாங்கின் ஹாங் டி பல்கலைக்கழகத்தின் மாணவர் லுகிப். ருகமே குடும்பம் மிகவும் ஏழை. கல்வி கட்டணம் செலுத்த முடியாது என்பதை அறிந்த சமிலி, உடனே தம் கையில் இருந்த 4900 யுவானை எடுத்துக்கொடுத்தார்.

"என் உதவியைப் பெற்ற மாணவர் மிகவும் மனமுருகினார். அவர் எனக்கு ஒரு கடிதம் அனுப்பினார். பட்டதாரியாகிய பின், கிராமத்துக்குத் திரும்பி சேவை புரிய வேண்டும் என மனவுறுதி பூண்டதாக அவர் கடிதத்தில் கூறினார். கிராமம், இத்தகைய திறமைசாலிகளை கூடுதலாகப் பயிற்றுவித்து அவர்களை கீழ்மட்டத்துக்குச் சேவை புரிய செய்ய வேண்டும்" என்றார், சமிலி.
ஒரு முறை, ரத்த சோகை நோய்வாய்பட்ட ஒரு குழந்தை, தொலைபேசி மூலம் சிங்கியாங் அறக்கொடை தலைமை சங்கத்தின் தலைமை செயலர் மா ரியுடன் தொடர்புக் கொண்டு, சிங்கியாங்கின் அறக்கொடை தூதர் சமிலியைச் சந்திக்க விரும்புவதாகக் கூறினார். உடனே, சமிலி, தலைமை செயலருடன் இணைந்து மருத்துவமனைக்குச் சென்று இக்குழந்தையைப் பாரித்தார். கையில் மலர்களை ஏந்திய வண்ணம், குழந்தையின் கையைப் பற்றிய உடனே, கண் இமைக்கும் தருணத்தில் சமிலியின் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது. குழந்தையும் அழுதது. சமிலி, கண்ணீர் வடித்துக் கொண்டே, குழந்தைக்காக பாடலுக்கு மேல் பாடலைப் பாடினார்.
பிறரை மனமுருகச் செய்திடும் கதைகள் ஏராளமானவை. சிங்கியாங் அறக்கொடை தலைமை சங்கத்தின் தலைமை செயலர் மா ரி கூறியதாவது:
"சமிலி, இனிமையான பாட்டொலி மூலம், சிங்கியாங்கிற்கும் மக்களுக்கும் தனது அன்பினை வெளிக்கொணர்கின்றார். அவரது ரத்தத்தில், கலை மீதான உளமார்ந்த அன்பும், பொது நலன் லட்சியத்திலான ஈடுபாடும் ஓடுகின்றன. சமிலி, மக்கள் மனதில் மதிப்புக்குரிய கலைஞராகவும், பொது நலன் லட்சியத்தின் தூதராகவும் திகழ்கின்றார்."
அவரது ஓய்வு நேரத்தில், படிப்பும், இன்னல்மிக்கவர்களுக்கு உதவி வழங்குவதும் ஆகிய இரண்டும், அடிக்கடி நிகழ்கின்றன. படிப்பு, மிகவும் முக்கியமானது என அவர் கருதுகின்றார். நடிகர் என்றால், இடைவிடாத படிப்பு தேவை. முன்னேற முடியும். மனிதருக்கு உயிர் ஒருமுறை மட்டும் உண்டு. சமூகத்துக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று சமிலி கருதுகின்றார். 1 2 3
|