• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-04 07:57:02    
வாழ்க்கை, ரெயில் பாதையினால் மாறும்

cri

உலகின் கூரை எனப்படும் கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான பீடபூமியில் உள்ள சிங்காய்-திபெத் ரெயில் பாதை ஜூலை முதலாம் நாள் போக்குவரத்துக்குத் திறந்து விடப்பட்டது. திபெத்தில் ரெயில் பாதை இல்லை என்ற வரலாற்றுக்கு இந்த ரெயில் பாதை முடிவு கட்டியது. திபெத்தில் வாழும் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு இது மேலும் விரைவான போக்குவரத்து வசதி, மேலும் மலிவான கட்டணம் என்ற நன்மையைக் கொண்டு வந்துள்ளது. மேலும் முக்கியமானது என்ன என்றால், அவர்களின் வாழ்க்கையிலும் சிந்தனையிலும் இந்த ரெயில் பாதை மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

70 வயதான தோஜிங்வங்சக், திபெத்தின் வடப்பகுதியில் உள்ள Naqu பிரதேசத்தில் ஒரு சாதாரண திபெத்திய ஆயர். 7 பேரைக் கொண்ட அவருடைய குடும்பத்தின் முக்கிய தொழில், மேய்ச்சலாக இருந்தது. 30க்கும் அதிகமான யாக் எருதுகள் மற்றும் 100க்கும் மேலான செம்மறி ஆடுகளை அவர்கள் வளர்த்தனர். இவை தான் அவர்களின் சொத்து. வருமானம் ஈட்டும் வழியும் இவையே. 2002ம் ஆண்டில், பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள், அவருடைய வீட்டிற்கு அருகில் வந்து, ரெயில் பாதை போடத் துவங்கினர். அந்த ஊரில் உள்ள பெரும்பாலான ஆயர்கள் அதை வந்து பார்த்தனர். வியாபாரம் செய்யும் வாய்ப்பு வந்து விட்டது என்பதை தோஜிங்வங்சங்சக் உணர்ந்து கொண்டார்.

"சிங்காய்-திபெத் ரெயில் பாதை திட்டப்பணி அலுவலகத்துக்கு அருகில் நான் ஒரு சிறிய கூடாரம் போட்டு, சிகரட்டு, மது பானம், நூடுல்ஸ் மற்றும் இதர சிற்றுண்டிகள் விற்கும் சிறு கடை ஒன்றை நடத்தினேன். கடந்த ஆண்டு மூவாயிரம் யுவான் வருமானம் பெற்றேன்" என்றார்.

தவிரவும், ரெயில் பாதை பராமரிப்பு குழுவில் குழும்பத்தினர்கள் அனைவரும் பங்கெடுத்தனர். குறிப்பிட்ட உழைப்புக்கேற்ற வருமானம் பெற்றனர். கடந்த ஓராண்டில், வளர்ப்பு கால்நடைகள் அதிகரிக்கப்படாத நிலையிலும், அவர்களின் வருமானம் ஒரு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. அதாவது பத்தாயிரம் யுவானுக்கு மேலானது.

1  2  3