• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-04 07:57:02    
வாழ்க்கை, ரெயில் பாதையினால் மாறும்

cri

நாட்டின் வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் வந்த ரெயில்பாதை தொழிலாளர்களுடன் கலந்துரையாடுவதன் மூலம், சிங்காய் மாநிலத்தின் கால்நடை உற்பத்திப் பொருள் சந்தை பற்றிய நிலைமையை தோஜிங்வங்சக் அறிந்து கொண்டார்.

Naqu என்னும் இடத்திலுள்ள விலையை விட, சிங்காய் மாநிலத்தின் கால்நடை உற்பத்திப் பொருட்களின் விலை பெரிதும் அதிகம் என்பதை அறிந்ததும், அவருக்கு ஒரு துணிவுமிக்க கருத்து ஏற்பட்டது. அவர் கூறியதாவது:

"இப்போது ரெயில்பாதை மூலம் சிறு வியாபாரம் செய்ய எண்ணுகின்றேன். ரெயில்வண்டி மூலம் கர்முக்குச் சென்று, எங்கள் கிராமத்தில் தயாரான யாக் எருது தோல், ஆட்டுத்தோல், கம்பளம் முதலியவற்றை அங்கு விற்று, பின்னர் அன்றாட வாழ்க்கைப் பொருட்களை கொண்டு வந்து விற்க விரும்புகின்றேன்" என்றார்.

தோஜிங்வங்சக், மாநில எல்லை தாண்டிய வியாபாரம் செய்ய தயாராயிருக்கின்றார்.

லாசா பல்கலைக்கழகத்தில் செய்தித்துறையில் கல்வி பயிலும் லோயிர் சங்சிய்யும் ரெயில்பாதை திறக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சியடைந்துள்ளார். உள் பிரதேசத்திலுள்ள பல்கலைக்கழகங்கள், பரஸ்பரம் கல்வியியல் பரிமாற்றத்தையும் மாணவர்கள் நட்புறவு நடவடிக்கைகளையும் அடிக்கடி நடத்துவதைப் போன்றே இனி, திபெத்திலும் நடத்த முடியும் என்று அவர் எதிர்பார்க்கிறார். முன்பு, திபெத்தில் போக்குவரத்து வசதி இல்லை என்பதால், திபெத் பல்கலைக்கழகம், இது போன்ற நடவடிக்கையை மேற்கொள்வதற்கு வாய்ப்பு மிகக் குறைவு. இது, அவருக்கு மனவருத்தம் தந்தது. ஆனால், செய்தித்துறை பல்கலைக்கழக மாணவர் என்ற முறையில், உள் பிரதேசத்துடன் தொடர்பு கொள்வதன் முக்கியத்துவத்தை அவர் பெரிதும் அறிந்து கொண்டார்.

சிங்காய்-திபெத் ரெயில்பாதை போக்குவரத்தில் இறங்கிய பின், உள் பிரதேச பல்கலைக்கழகங்களுடன் தொடர்பு கொள்ளத் துவங்கினார். அவருடைய முன்மொழிவில் அநேக பல்கலைக்கழகங்கள் அக்கறை காட்டின. அவற்றின் மாணவர்கள் ரெயில்வண்டி மூலம் திபெத்துக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளனர்.

லோயிர் சங்சிய் கூறியதாவது:

"மிகவும் மகிழ்ச்சி. இந்த ரெயில்பாதை மூலம் உள் பிரதேச சகோதரர்களும் சகோதரிகளும் திபெத்துக்கு வந்து, எங்களுடன் அதிகமாக தொடர்பு கொள்ள முடியும். நாங்களும் எங்கள் பள்ளிகளுக்கு வருகை தந்து, பரிமாற்றம் செய்யுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்கலாம்" என்றார்.

1  2  3